மேஷ ராசி குரு பெயர்ச்சி பலன்கள், சனிப்பெயர்ச்சி பலன்களை பார்த்திருப்போம் ஆனால் இது என்ன அதிசார குரு பெயர்ச்சி பலன் என கேள்வி எழலாம். இங்கு அதிச்சாரம் என்றால் என்ன, அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
அதிசார குரு பெயர்ச்சி என்றால் என்ன அதனால் எந்த ராசிக்கு பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கு பார்ப்போம்.
குரு அதிசாரம் வக்கிரம்
அதிசாரம் ஒரு கிரகத்தின் சாதாரண நகர்வை விட அதிவேகமாக நகர்வதற்கு அதிசாரம் என்ற பெயர். இயல்பைவிட குறைவான வேகத்தில் நகர்வதற்கு வக்ரம் என்று பெயர்.
பொதுவாகக் குருபகவான் ஒரு ராசியில் ஒரு ஆண்டு சஞ்சரிப்பது வழக்கம். ஆனால் அதனிடையே குருவின் வேகம் அதிகரித்தது அதற்கு முன்னுள்ள ராசிக்கு செல்வது, தற்போது தனுசு ராசியில் உள்ள குரு மகர ராசிக்கு செல்வது அதிசார குரு பெயர்ச்சி என்று கூறப்படுகிறது.
குரு பகவான் கடந்த ஆண்டு 2019 நவம்பர் 4ம் தேதி விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆனார்.
இவர் மார்ச் 29ஆம் தேதி அதிசாரம் அடைந்து மகர ராசிக்கு செல்ல உள்ளார். இங்கு குருபகவான் 92 நாட்கள் இருப்பார். அதாவது ஜூன் 29ஆம் தேதி வரை மகரத்தில் வாசிப்பார்.
அதன் பின்னர் மே மாதம் 14 ஆம் தேதியிலிருந்து ஜூன் 29 வரை குரு வக்கிர கதி அடைந்து மீண்டும் தன் இயல்பான நிலைக்கு திரும்ப வேகத்தை குறைத்து தனுசு ராசி அடைவார்.
திருக்கணித முறைப்படி கணிக்கப்பட்ட இந்த அதிசார குரு பெயர்ச்சி மேஷ ராசிக்கு எப்படிப்பட்ட பலன்களை தரும் என்பதை இங்கு பார்ப்போம்.
மேஷ ராசிக்கான பலன்கள்
கால புருஷ தத்துவத்தில் பத்தாவது இடத்தில் குரு சஞ்சரிக்க உள்ளார். ஏற்கனவே மகர ராசியில் சனி ஆட்சி பெற்று இருக்கிறார். தற்போது குரு, சனியுடன் சேர்ந்து நீசம் அடைகிறார். அதோடு அங்கு செவ்வாயும் பலமாக உள்ளார். இருப்பினும் குரு நீச்ச பங்க ராஜ யோகத்தை தர உள்ளார்.
குரு பகவானும், சனி பகவானும் 10ல் இருப்பது மிகவும் சிறப்பானது. ஒன்பதாம் வீட்டு அதிபதி குருவும், பத்தாம் வீட்டு அதிபதி சனியும், பத்தாம் வீட்டில் இருப்பதால், அதாவது தொழில், ஜீவன ஸ்தானத்தில் இருப்பதால் இருவரும் சேர்ந்து மிக நல்ல பலன்களை தருவார்கள்.
குரு, சனியின் யோக பலன்கள்
இதில் என்ன விசேஷம் என்றால் மேஷ ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருந்து சிறப்பான பலன்களைத் தரக்கூடியவர் குருபகவான்.
அவர் பத்தாமிடத்தில் செல்லும்போது அங்கிருக்கும் சனிபகவானின் கெடுபலன்களை குறைப்பார். இதனால் இருவரும் சேர்ந்து நல்ல பலன்களையே மேஷ ராசிக்கு தர உள்ளனர்.
குருபகவானுக்கு சொல்லப்பட்டுள்ள வேலைகளான நிதி, நீதி துறையில் உள்ளவர்கள், வங்கித்துறை, வட்டி கடை நடத்துபவர்கள், தங்க நகை தயாரிப்பு விற்பனை உள்ளிட்டவை மிக சிறப்பாக நடைபெறும்.
அதோடு கோயில், கோயிலை சுற்றிய செய்பவர்கள், ஆசிரியர்கள் மிகச் சிறப்பான பலன்கள் கிடைக்க உள்ளது.
அதேபோல் சனி பகவானுக்குரிய தோல் பொருட்கள், உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள், சட்டத்துறை, துப்புரவு ஊழியர்கள், இரும்பு வியாபாரம், நடைபாதை வியாபாரிகள் சிறப்பான பலன்கள் கிடைக்க உள்ளது.
சூரியனின் சாதக பலன்கள்
அரசாங்க உத்தியோகத்திற்கு தேர்வு எழுதுபவர்களுக்கு அதில் பணிபுரிபவர்களுக்கும், மிகச் சிறப்பான பலன்கள் தர உள்ளார். ஏனெனில் குருபகவான் தற்போது உத்திராடம் 2 ஆம் பாதத்தில் சஞ்சரிக்க உள்ளார்.
உத்திராடம் சூரியனின் நட்சத்திரமாக உள்ளதாலும், குரு பகவானின் நண்பராக இருப்பதாலும் இதுபோன்ற அரசு தொடர்பான பணிகள் வேலைகள் சிறப்பாக அமையும்.
மேஷ ராசிக்கு குருபகவானும் நண்பர் சூரியனும் நண்பர் என்பதால் அரசு தொடர்பான வேலைக்கு தயாராகி வந்தால் சாதகமான பலன்கள் கிடைக்கும். அரசாங்க ரீதியான உதவிகளும் கிடைக்கும்.
அதனால் மேஷ ராசியினர் குரு அதிசாரம் அடையக்கூடிய 92 நாட்கள் அரசாங்க வேலைக்கு முயன்றாள் கிடைக்க மிக நல்ல வாய்ப்பு உள்ளது.
உத்தியோகஸ்தர்கள்
உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, தேவையான இடத்திற்கு இடமாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய வேலையை எதிர்பார்த்து கொண்டிருப்பவர்களுக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது.
வெளிநாடு வேலை, அது தொடர்பான விசா கிடைக்கப் பெறுவதில் நல்ல வாய்ப்பு அமையும்.
குரு சனியுடன் சேர்வதால் சனியின் பார்வை பலனும் நன்மையாகவே அமையும்.
குருவின் ஐந்தாம் பார்வை
குருவின் ஐந்தாம் பார்வை ராசிக்கு இரண்டாம் இடத்தில் விழுவதால், அதாவது குடும்ப லாபஸ்தானத்தில் விழுவதால் குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி தருவீர்கள். ஆடை ஆபரணம் சேரும்.
இரண்டில் குருவின் பார்வை இருப்பதால் குடும்பத்தில் நபரின் சேர்க்கை ஏற்படும். அதாவது திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்க சிறப்பான காலமாகும். அதனால் அவர்களுக்கு குழந்தைப்பேறு விரைவில் ஏற்பட வாய்ப்புள்ளது.
குருவின் ஏழாம் பார்வை
குருவின் ஏழாம் பார்வையாக கடக ராசியை பார்ப்பதால் அதாவது தாயார் சுக பார்ப்பதால் தாயின் உடல் நிலை சீரடையும். சுகபோகங்கள் ஏற்படும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள்.
வண்டி வாகன யோகம் உண்டு. மாற்றி புது வண்டி வாங்க நினைப்பவர்கள் இந்த காலத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
வீடு கட்டத் தொடங்குவதற்கு சிறப்பான காலமாகும். வீடு மனை வாங்க நல்ல யோகமான காலம் ஆகும். இது போன்ற நல்ல செயல்கள் எல்லாம் நடக்கக்கூடிய காலமாகும்.
குருவின் ஒன்பதாம் பார்வை
குருவின் 9-ம் பார்வையால் நோய் எதிரிகள் சாரமான கன்னி ராசியை பார்ப்பதால், உங்களின் எதிரிகள் நீங்க வார்கள்.
கூடுதல் விசேஷம் என்னவென்றால் பத்தாம் இடமான கேந்திர ஸ்தானத்தில் அமைந்திருப்பதால் மிக விசேஷமானது. அதாவது கேந்திரத்தில் சந்திரன் இருப்பதும், சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு இருப்பதும் மிகச் சிறப்பானது.
குருவின் ஆறாம் பார்வை
குருவின் ஆறாம் பார்வையால் பார்ப்பதால் எதிரிகள் நீங்கி, அவர்களால் இருந்த பிரச்சினைகள் நீங்கி மிக நல்ல களமாக இருக்கும்.
சனிபகவானும் பின்னர் பார்வையால் பார்ப்பதால் பிரச்சினைகள் நீங்கி சுப செய்திகள், சுப நிகழ்வுகள் ஏற்படக் கூடிய மிக அருமையான காலமாகும்.
சனியின் ஏழாம் பார்வை
ஏழாம் பார்வையாக உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டைப் பார்ப்பதால் வண்டி வாகன சேர்க்கை ஏற்படும். தாயாரின் உடல் நிலை சீராகும் குடும்பத்தில் அமைதியும், நிம்மதியும் ஏற்படும்.
சனியின் பத்தாம் பார்வை உங்கள் ராசிக்கு ஏழாம் இடமான துலாம் ராசியை பார்ப்பதால் தொழில் மிகச் சிறப்பாக அமையும்.கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
குரு தனுசு வீட்டில் இருக்கும்போதே சிறப்பான நன்மையான பலன்களை அளித்துக் கொண்டிருந்தார். தற்போது பத்தாம் வீட்டில் சனியுடன் சேர்ந்தாலும் மிக சிறப்பான பலன்களை தர உள்ளார். சர ராசிக்கு இந்த அதிசார குரு பெயர்ச்சி பலன் யோகமான காலமாகத்தான் பார்க்கப்படுகிறது.
அதனால் மேஷ ராசியினர் இந்த அருமையான காலத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.