பங்குனி மாதத்தில் தெய்வீக திருமணங்கள் அதிகம் நிகழும். இந்த மாதத்தில் கோவில்களில் நடைபெறும் திருக்கல்யாணங்களைக் கண்டால் திருமணத்தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
பார்வதி - பரமேஸ்வரன், மீனாட்சி - சுந்தரேஸ்வரர், ஆண்டாள் - ரங்கமன்னார், தெய்வானை - முருகன் என திருக்கல்யாணங்கள் அனைத்தும் பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளில் நடந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
பல்வேறு சிறப்புகள் கொண்ட பங்குனி மாதத்தில் நவ கிரகங்கள் சஞ்சாரத்தின் படி மேஷம், ரிஷபம், மிதுனம் மற்றும் கடகம் போன்ற ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷம் ராசிக்கு கிரகங்கள் சஞ்சாரத்தை பார்த்தால், பங்குனி மாதம் 12ஆம் வீட்டில் சூரியன், ராசியில் சுக்கிரன், லாபத்தில் புதன், பாக்ய ஸ்தானத்தில் குரு கேது, செவ்வாய் தொழில் ஸ்தானத்தில் சனி, மூன்றாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த மாதம் செவ்வாய் 9ஆம் தேதிக்கு மேல் உச்சமடைந்து ஆட்சி பெற்ற சனியோடு இணைகிறார்.
ரிஷப ராசியில் சுக்கிரன் ஆட்சி பெறுகிறார். 15ஆம் தேதிக்கு மேல் புதன் நீசமடைகிறார். 16ஆம் தேதி முதல் புதன் அதிசாரமாக மகரம் ராசிக்கு சென்று ஆட்சி உச்சம் பெற்ற செவ்வாய் சனியோடு இணைந்து நீசபங்க ராஜயோகம் பெறுகிறார்.
மேஷம் ராசிக்கு இந்த பங்குனி மாதம் 14 -03-2020 முதல் 13-04-2020 வரை எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். ஐந்தாம் வீட்டு அதிபதி 12ஆம் வீட்டிற்கு வருகிறார். விரைய செலவுகள் வரலாம்.
மாற்றங்கள் முன்னேற்றத்தை கொடுக்கும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். அரசுக்கு செலுத்தவேண்டிய வரிகளை செலுத்துங்கள். குரு பகவான் அதிசார பயணத்தால் தொழிலில் கவனிங்க.
வேலை செய்யும் இடத்தில் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருங்க. யாரை நம்பியும் வேலைகளை ஒப்படைக்காதீங்க. வேலையில புரமோசன், இடமாற்றங்கள் எதிர்பார்த்திருந்தால் தேடி வரும்.
உங்களுக்கு பணவரவு இந்த மாதம் அதிகமாக இருக்கும் கூடவே சுப செலவுகளும் ஏற்படும். உடம்புல உஷ்ண தொடர்பான நோய்கள் வரலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் கவனமாக இருங்க இல்லாவிட்டால் உங்க மதிப்புக்கு பங்கம் வந்து விடும். சுய தொழில் செய்பவர்களுக்கு லாபம் வரும். பணத்தை இந்த மாதம் எதிலும் முதலீடு பண்ணாதீங்க.
முக்கியமாக பங்கு வர்த்தக முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். உங்க முயற்சிக்கு வெற்றிகள் தேடி வரும். இந்த மாதம் சந்திராஷ்டமத்தில் ஆரம்பித்து சந்திராஷ்டமத்தில் முடிகிறது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள். உடல் ஆரோக்கியத்தில ரொம்ப அக்கறை காட்டுங்க. உங்க குழந்தைகள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க.
அப்பாவோட உடம்பையும் கவனிங்க. இரவு நேரத்தில் காரமான உணவுகளை சாப்பிட வேண்டாம். வார்த்தைகளில் கவனமாக இருங்க கோபமாக பேசாதீங்க. வெளிநாடு வேலைகள் கை கூடி வரும். விசா பிரச்சினைகள் தீரும். பங்குனி உத்திர நாளில் சிவ ஆலயம் சென்று தரிசனம் செய்து வாருங்கள் நன்மைகள் நடைபெறும்.
ரிஷபம்
இந்த மாதம் உங்களுக்கு ரொம்ப நல்ல மாதம் காரணம் ஏற்கனவே குரு பகவான் எட்டாம் வீட்டில் அமர்ந்து விபரீத ராஜயோகத்தை கொடுத்தார். இனி குரு பகவான் அதிசாரமாக உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டிற்கு வந்து உங்க ராசியை பார்க்கிறார். உங்க ராசிக்கு குரு பார்வை கிடைப்பது யோகத்தை கொடுக்கப் போகிறது.
சூரியனால் உங்களுக்கு லாபம் அதிகமாகும். பெண்களுக்கு குடும்ப பட்ஜெட்டை சிறப்பாக நிர்வாகம் செய்யும் அளவிற்கு பண வருமானம் வரும். புதனின் சஞ்சாரத்தினால் பணம் தாராளமாக வரும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் புத்திசாலித்தனம் அதிகமாகும். புதன் நீசம் பெற்றிருப்பதால் இரவு நேர தூக்கத்தை கெடுத்துக்காதீங்க.
வேலையை விட்டவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். சிலருக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்த டென்சன் நீங்கும். பிரச்சினைகள் தீர்ந்து சிலருக்கு உத்யோக உயர்வுடன் சம்பள உயர்வும் கிடைக்கும். அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படும். பங்குனி மாதம் உங்களுக்கு ஏற்றங்களை தரப்போகிறது.
காரடையான் நோன்பு இருந்து கடவுளை வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும். ஸ்ரீ ராமபிரானை வணங்குங்கள் துன்பங்கள் துயரங்கள் நீங்கும்.
மிதுனம்
சூரியனால் இந்த மாதம் உங்களுடைய வேலையில் உற்சாகமும் சந்தோஷமும் கிடைக்கும். காரணம் உங்க தொழில் ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிக்கிறார். திடீர் புரமோசன் கிடைக்கும்.
அரசு வேலைக்கான தேர்வுகளை எழுதலாம். போட்டி பொறாமைகள் வரலாம் கவனமாக இருங்க. வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருங்க. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நீங்கும். விட்டுக்கொடுத்து போங்க நெருக்கம் கூடும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் குதூகலம் அதிகமாகும். குடும்பதோடு சுற்றுலா சென்று வருவீர்கள்.
பெண்களுக்கு இந்த மாதம் ரொம்ப நல்ல மாதம் தூக்க குறைபாடுகள் நீங்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகமாகும். 12ஆம் வீட்டிற்கு சுக்கிரன் வரும் போது சுப விரைய செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கடன் அடைக்கும் அளவிற்கு வருமானம் வரும். உங்களுக்கு வெற்றிகள் தேடி வரும். அறிவாற்றல் அதிகமாகும். மனம் அலைபாயும் என்றாலும் தியானம் யோகா செய்யுங்க. பணம் விசயத்தில் கவனமாக இருங்க.
யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. வண்டி வாகனங்களில் போகும் போது நிதானமாக போங்க. இரவு நேரத்தில் உணவுகளை கவனமாக சாப்பிடுங்க. அசைவ உணவுகளை தவிர்த்து விடுங்க.
குறிப்பா காரமான உணவுகளை சாப்பிடாதீங்க. மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரப்போகிறது. தேர்வு நேரம் என்பதால் கவனமாக படிங்க. மன தைரியத்தோடு தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள். புதன்கிழமை பெருமாளையும் லட்சுமி ஹயக்ரீவரையும் வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும்.
கடகம்
உங்களுக்கு நிறைய நல்லது நடக்கப் போகிறது. காரணம் கண்டச்சனியால் கவலைப்பட்டுக்கொண்டிருந்த உங்களுக்கு நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும்.
காரணம் குருபகவான் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டிற்கு அதிசாரமாக வரப்போகிறார். நீசபங்க ராஜயோகம் பெற்று சஞ்சரிக்கப் போகும் குரு பகவானால் உங்களுக்கு திடீர் யோகங்கள் தேடி வரும்.
கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பேச்சில் கவனமாக இருங்க. சனியோடு குரு சேர்ந்து ஏழாம் வீட்டில் சஞ்சரிப்பதால் சில சங்கடங்கள் ஏற்படலாம். அரசியல் துறையில் உள்ளவர்கள் பேச்சில் கவனமாக பேசவும். மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். வெளிநாடு வேலைக்கு முயற்சி செய்யலாம். இந்த மாதம் விசா கிடைக்கும்.
இந்த மாதம் ஆணோ பெண்ணோ எதிர்பாலினத்தவர்களிடத்தில் நட்பாக பழகும் போது கவனமாக இருங்க. தேவையற்ற நட்புக்களை தவிர்த்து விடுங்கள். இரவு நேரங்களில் தேவையில்லாமல் யாருடனும் பேச வேண்டாம். சமூக வலைத்தளங்களில் போட்டோக்கள், வீடியோக்களை பதிவுகளை போடும் போது கவனமாக இருங்க.
திருமணம் மற்றும் வேலைக்காக காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த மாதம் கஷ்டங்கள், சங்கடங்கள் நீங்கும். செவ்வாய் பார்வையால் திருமண பேச்சுவார்த்தை சுபமாக முடியும். வரன் தேடி வரும் சிலருக்கு சுபமாக முடியும். புது வேலைக்கு முயற்சி செய்யலாம். நல்ல வேலைகள் கிடைக்கும்.
இருக்கிற வேலைகளை விட்டு விட வேண்டாம். குருவும் ஏழாம் வீட்டிற்கு வந்து நீச பங்கம் அடைகிறார். குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைப்பதால் பெண்களுக்கு நன்மைகள் நடைபெறும். குழப்பங்கள் நீங்கும். குல தெய்வ வழிபாடு சந்தோஷத்தை கொடுக்கும்.