
4ம் எண் நபர்கள், வழக்கத்திற்கு மாறானவர்கள். ஒவ்வொருவரும் தனிப்பட்ட குணாதிசயம் கொண்டவர்கள்.
ஆனால் ஜோதிடம் கூறுவதைப் போல் இவர்கள் ரொமண்டிக் தன்மை கொண்டவர்கள் அல்ல.
4ம் எண் ஆண்கள் அனைவரும் இந்த குணத்தைக் கொண்டிருப்பதில்லை, இவர்களுள் சில ஆண்கள் மிகவும் நேர்மையானவராக இருப்பார்கள், இவர்களின் துணை இவர்களை ஆதிக்கம் செலுத்த அனுமதிப்பார்கள்.
உறவுகளில் அர்பணிப்புடன் இருக்கும் தன்மைக் கொண்டவர்கள்.
குறிப்பாக 22ம் தேதி பிறந்தவர்கள் பொதுவாக தனது துணையிடம் அதிக விசுவாசத்துடன் இருப்பார்கள். பொதுவாக 4ம் எண்கள் நபர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள், எளிதில் கோபம் இவர்களை ஆட்கொள்ளும் என்பதால் திருமண முறிவு அல்லது விவாகரத்து உண்டாகும் வாய்ப்புகள் அதிகம்.
திருமணம் குறித்த முடிவுகளில் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். குறிப்பாக திருமணம் மற்றும் உறவு தொடர்பான முடிவுகளில் 4ம் எண் நபர்கள் பொதுவாக அதிர்ஷ்டமில்லாதவர்கள்.