மார்கழி மாத ராசிபலன்கள்: எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்? எந்தெந்த ராசியினருக்கு எச்சரிக்கை

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் :12 ராசிகளுக்கான மார்கழி மாத ராசிபலன்கள்

மேஷம்

நிறை குறைகளை அலசி ஆராய்ந்து யாரையும் துல்லியமாக கணிக்கும் நீங்கள் மற்றவர்களின் உணர்வுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள். இந்த மாதம் முழுக்க புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் விலகி நின்ற பழைய நண்பர்கள் தேடி வருவார்கள்.

அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் உதவுவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய முயல்வீர்கள். பூர்வ புண்ணியாதிபதி சூரியன் 9ம் வீட்டில் நிற்பதால் அவ்வப்போது பிள்ளைகளால் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். தந்தையாரின் உடல் நிலை பாதிக்கும்.

17ம் தேதி முதல் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு 12ல் மறைந்திருப்பதால் சொத்துப் பிரச்னையில் உணர்ச்சி வசப்பட்டு முடிவுகள் எடுக்க வேண்டாம். நிலம், வீட்டு மனை வாங்கும் போது தாய்பத்திரத்தை சரி பார்த்துக் கொள்வது நல்லது. சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். ஆனால் சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் தடைகள் உடைபடும்.

மதில்மேல் பூனையாக நின்ற நிலை மாறி சாதித்து விடலாம், என்ற நம்பிக்கை பிறக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கணவன் மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும். வீட்டில் தள்ளிப் போன சுபகாரியங்கள் கூடி வரும்.

சனி 9ல் நிற்பதால் பிரிந்திருந்த கணவன்மனைவி ஒன்று சேர்வீர்கள். வழக்கில் வெற்றி கிடைக்கும். நோயிலிருந்து விடுபடுவீர்கள். வேலைகிடைக்கும்.

அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசலாலும், உங்களைப்பற்றிய வதந்திகளாலும் உங்கள் புகழ் குறையும்.

மாணவர்களே! படிப்பில் மதிப்பெண் கூடும். நண்பர்களுடன் இருந்த கருத்து மோதல்கள் சரியாகும். கன்னிப்பெண்களே! காதல் விவகாரத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.

யதார்த்தமாகவும், விளையாட்டாகவும் நீங்கள் எதையோ சொல்லப்போய் அதை சிலர் பெரிதாக்கிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும்.

உங்கள் பாக்யாதிபதியான குருபகவான் 8ம் வீட்டிலேயே மறைந்திருப்பதால் அதிக கடன் வாங்கி பெரிய தொகையெல்லாம் முதலீடு செய்ய வேண்டாம். கொஞ்சம் எச்சரிக்கையாக செயல்படுங்கள். வேலையாட்கள், பங்குதாரர்களின் போக்கு உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். அனுசரித்துப் போவது நல்லது. ரியல் எஸ்டேட், கமிஷன் வகைகளால் பணம் வரும்.

ராசிக்கு 10ல் கேது அமர்ந்திருப்பதால் உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். என்றாலும் உங்களின் திறமை வெளிப்படும். தொல்லை கொடுத்து வந்த அதிகாரி மாறுவார். புது அதிகாரி வந்து சேருவார். அவர் மூலமாக சில காரியங்களை சாதிப்பீர்கள்.

இடமாற்றங்கள் எதிர்பார்த்தபடி அமையும். கலைத்துறையினரே! பழைய நண்பர்களால் பலனடைவீர்கள்.

விவசாயிகளே! அண்டை நிலத்தாருடன் அனுசரித்துப் போங்கள். விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் வெற்றி பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்:

டிசம்பர் 21,22,23,24,29,30,31 மற்றும் ஜனவரி 1,7,8,9,10,11

சந்திராஷ்டம தினங்கள்:

ஜனவரி 2,3,4ம் தேதி பிற்பகல் 2.02மணி வரை.

ரிஷபம்

விருப்பு, வெறுப்பின்றி நடுநிலையோடு செயல்படும் நீங்கள் மனதில் பட்டதை பளிச்சென்று பேசுபவர்கள். அடுத்தத்தடுத்து வேலைகள் வந்தாலும் அசராமல் முடிப்பவர்கள். குருபகவான் வலுவாக இருப்பதால் இடையூறுகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். தந்தைவழி உறவினர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் புதிய நண்பர்கள், திடீர் பயணங்களால் திருப்புமுனை ஏற்படும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்து வந்த வழக்கில் வெற்றிக் கிட்டும்.

எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்தி கட்ட நினைப்பீர்கள். உங்கள் ராசிக்கு 31ம் தேதி வரை 6ல் மறைந்து நின்று அலைச்சல், செலவுகளை தந்து கொண்டிருக்கும் உங்கள் ராசிதான் சுக்கிரன் ஜனவரி 1ம் தேதி முதல் 7ம் வீட்டில் அமர்ந்து உங்களை பார்ப்பதால் வாடிய முகம் மலரும்.

பணவரவு அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சூரியன் 8ம் வீட்டில் இந்த மாதம் முழுக்க நிற்பதால் பெற்றோரின் உடல் நிலை பாதிக்கும்.

கொஞ்சம் அலைச்சலும் இருக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும் போதும், சாலையை கடக்கும் போதும் நிதானம் அவசியம். அரசு விஷயங்கள் தாமதமாக முடியும். அஷ்டமத்துசனியும் நடைபெறுவதால் பல காரியங்கள் சிக்கலாகும். பண விஷயத்தில் கறாராக இருங்கள்.

யாருக்காகவும், கேரன்டர் கையெழுத்திடாதீர்கள். 17ம் தேதி முதல் செவ்வாய் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் உங்களுடைய செல்வாக்குக் கூடும். ஆளுமைத் திறனும் அதிகரிக்கும். வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்வீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள், பிரச்னைகள் ஒரு முடிவுக்கு வரும். அரசியல்வாதிகளே! பெரிய பொறுப்புகள், பதவிகள் வரும். கோஷ்டி பூசல்கள் மறையும்.

மாணவர்களே! படிப்பில் முன்னேறுவீர்கள். நீண்ட நாட்களாக பார்த்து ரசிக்க வேண்டுமென்று நினைத்திருந்த ஊர்களுக்குச் சென்று வருவீர்கள்.

கன்னிப்பெண்களே! உங்களின் ஆசைகள் நிறைவேறும். உயர்கல்வி மீது இருந்த ஆர்வமில்லாப் போக்கு மாறும். ராகு 3ல் நிற்பதால் வியாபாரத்தில் இந்த மாதம் கணிசமாக லாபம் உயரும்.

புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். கடையை விரிவுப்படுத்தி, அழகுப்படுத்துவீர்கள். வேற்றுமதத்தினரால் ஆதாயம் உண்டு. உணவு, மருந்து, கட்டிட வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் செல்வாக்குக் கூடும். அதிகாரிகளுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும்.

உங்களின் புதுத் திட்டங்களை அதிகாரிகள் வரவேற்பார்கள். உங்களுடைய ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்வார்கள். சிலருக்கு இடமாற்றம் சாதகமாகும்.

கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகள் பரவலாக பாராட்டிப் பேசப்படும். பரிசு, பாராட்டுகளும் உண்டு. விவசாயிகளே! வாய்க்கால், வரப்புச் சண்டையெல்லாம் தீரும். புதிய திட்டங்கள் நிறைவேறும் மாதமிது.

ராசியான தேதிகள்:

டிசம்பர் 16,17,18,19,23, 24,25,26,28,31 மற்றும் ஜனவரி 1,10,11,12,13,14.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜனவரி 4ம் தேதி பிற்பகல் 2.03மணி முதல் 5,6ம் தேதி வரை.

மிதுனம்

மனசாட்சி சொல்வதை மறுக்காமல் செய்யும் குணமுடைய நீங்கள், குற்றம் குறைகள் இருந்தாலும் சுற்றத்தாரை அனுசரித்து வாழக்கூடியவர்கள். டிசம்பர் 31ம் தேதி வரை சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். முடியுமா முடியாதா என்றிருந்த பல காரியங்கள் இப்பொழுது முடிவுக்கு வரும்.

புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பால்ய சினேகிதர்கள் உதவுவார்கள். ஜனவரி 1ம் தேதி முதல் சுக்கிரன் 6ல் நுழைவதால் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு, வாகன விபத்து, தொண்டைகாது வலி வந்து போகும். டிசம்பர் 29ம் தேதி முதல் ராசிநாதன் புதன் 7ல் நுழைவதால் திட்டமிட்டு எந்த வேலையையும் செய்வீர்கள்.

இடவசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தீர்களே, இனி நல்ல இடவசதியுடன் கூடிய வீட்டிற்கு குடிபுகுவீர்கள். மகான்கள், கல்வியாளர்களின் நட்பு கிட்டும்.

சூரியனும், சனியும் 7ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதாலும் அடிக்கடி கோபப்படுவீர்கள், வீண் விவாதங்களும் வரக்கூடும். உடன்பிறந்தவர்களை நினைத்து கவலைப்படுவீர்கள். 17ம் தேதி முதல் செவ்வாய் 10ம் வீட்டிலேயே தொடர்வதால் பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். உங்கள் ரசனைக் கேற்ப வீடு, மனை அமையும்.

வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். சகோதர வகையில் நல்லது நடக்கும். ராசிக்கு 2ல் ராகு நிற்பதாலும் தூக்கம் அவ்வப்போது குறையும். பழைய கசப்பான சம்பவங்கள், கடந்த காலத்தில் ஏற்பட்ட அவமானங்கள், இழப்புகள், ஏமாற்றங்களை இவற்றையெல்லாம் நினைத்து ஆதங்கப்படுவீர்கள்.

அரசியல்வாதிகளே! தொகுதி மக்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்வீர்கள். தொகுதியிலே செல்வாக்குக் கூடும். மாணவர்களே! படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

கணிதப் பாடத்தில் அதிக மதிப் பெண்பெறுவீர்கள். விளையாட்டுப் போட்டியிலும் வெற்றி பெறுவீர்கள். கன்னிப்பெண்களே! உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். போட்டித் தேர்வுகளில் கலந்துக் கொண்டு வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கூடும்.

பழைய வாடிக்கையாளர்களை போராடி தக்க வைத்துக் கொள்வீர்கள். பழைய பாக்கிகளையும் இதமாகப் பேசி வசூலிப்பது நல்லது. கமிஷன் வகைகளால் லாபம் வரும். குரு 6ல் தொடர்வதால் உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகிக் கொண்டேப்போகும். உங்களைப் பற்றிய வீண் வதந்திகளும் வரும். விரும்பத்தகாத இடமாற்றம் வரக்கூடும். மேலதிகாரியுடன் மோதிக் கொண்டிருக்காதீர்கள். உயரதி

ரிகளைப் பற்றிய ரகசியங்களை வெளியே சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். கலைத்துறையினரே! நகைச்சுவை படைப்புகள் மூலமாக பிரபலமடைவீர்கள். விவசாயிகளே! அக்கம்பக்கம் நிலத்தாருடன் வாய்த் தகராறு, வரப்புத் தகராறுகளை தவிர்ப்பது நல்லது. பழைய சிக்கல்கள் தீருவதுடன், புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்:

டிசம்பர் 16,17,18,19,20,25, 26,27,28 மற்றும் ஜனவரி 3,4,5,12,13,14.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜனவரி 7,8,9ம் தேதி காலை 11.58 மணி வரை.

கடகம்


தீவிரமாக யோசித்து மிதமாகச் செயல்படுவீர்கள். வாக்கு சாதுர்யத்தால் வாதங்களில் வெல்வீர்கள். பிறர் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டி நல்வழிப் படுத்துவீர்கள். 28ம் தேதி வரை புதன் வலுவாக இருப்பதால் மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வருங்காலத் திட்டங்களை நிறைவேற்றுவீர்கள்.

அரசு காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். 29ம் தேதி முதல் புதன் 6ல் மறைவதால் உறவினர்கள், நண்பர்களுடன் உரசல் போக்கு வந்து போகும். ராசிக்கு 6ம் வீட்டில் சூரியன் இந்த மாதம் முழுக்க வலுவாக இருப்பதால் அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு.

அரசாங்கத்தில் சிலர் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஷேர் மூலம் திடீர் பணவரவு உண்டு. பெரிய போட்டிகளில் கலந்துக் கொண்டு வெற்றி பெறுவீர்கள்.

17ம் தேதி முதல் செவ்வாய் உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் நிற்பதால் ஒருபக்கம் செலவினங்கள் இருந்தாலும் மற்றொரு பக்கம் உங்கள் ரசனைக் கேற்ப வீடு, மனை அமைய வாய்ப்பிருக்கிறது. சகோதரங்களால் பயனடைவீர்கள்.

உங்கள் ராசிக்கு 6ம் வீட்டிலேயே சனி நிற்பதால் கடினமான காரியங்களைக் கூட எளிதாக முடிப்பீர்கள். எதிலும் வெற்றி உண்டாகும். தடைகளெல்லாம் நீங்கும். வேற்றுமொழி, வேற்றுமதத்தை சார்ந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.சு

க்கிரனும், குருவும் சாதகமான வீடுகளில் பயணிப்பதால் பழைய உறவினர்களை சந்தித்து மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள்.வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்படாகும். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகளே! தலைமைக்கு நெருக்கமாவீர்கள். புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தொகுதி மக்களிடம் புகழடைவீர்கள். மாணவர்களே! இந்த மாதத்தின் முற்பகுதியில் பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த இடத்திற்கு சென்று வருவீர்கள். பொது அறிவுத் திறன் கூடும்.

கன்னிப்பெண்களே! உங்களின் கோரிக்கைகளை பெற்றோர் நிறைவேற்றி வைப்பார்கள்.

போட்டித் தேர்வுகளில் வெற்றிப் பெற்று சிலர் புது வேலையில் சென்று அமர்வீர்கள். வியாபாரத்தில் இந்த மாதம் லாபம் கூடும். புதிதாக முதலீடு செய்வீர்கள். கேட்ட இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும். ஏற்றுமதிஇறக்குமதி வகைகளாலும், ஷிப்பிங் வகைகளாலும் லாபம் அதிகரிக்கும். புது வாடிக்கையாளர்களும் வருவார்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். ஒரு சிலர் கடையை மெயின் ரோட்டிற்கு இடம் பார்த்து மாற்றுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

அனுபவமிக்க வேலையாட்கள் வந்தமர்வார்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை இருக்கும். என்றாலும் மூத்த அதிகாரிகள் உங்களைப் பாராட்டுவார்கள். உங்களுடைய கடின உழைப்பை புரிந்துக் கொள்வார்கள். சிலருக்கு சாதகமான இடமாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சம்பளம் கூடும், புது சலுகைகளும் கிடைக்கும்.

கலைத்துறையினரே! புதிய வாய்ப்புகள் கூடி வரும். பழைய கலைஞர்கள் உதவுவார்கள்.

விவசாயிகளே! மாற்றுப் பயிர்களால் ஆதாயமடைவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். டிராக்டர் போன்ற சாதனம் வாங்க உதவிகள் கிடைக்கும். வசதி, வாய்ப்புகள் கூடும் மாதமிது.

ராசியான தேதிகள்:

டிசம்பர் 18,19,20,21,27,28, 29,30,31 மற்றும் ஜனவரி 1,5,6,7,8,14.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜனவரி 9ம் தேதி காலை 11.59 மணி முதல் 10,11ம் தேதி வரை.

சிம்மம்

நிறை குறைகளை அலசி ஆராய்ந்து எவரையும் துல்லியமாக கணிக்கும் நீங்கள் மற்றவர்களின் உணர்வுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள். சுக்கிரன் இந்த மாதம் முழுக்க சாதகமான வீடுகளில் செல்வதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும்.

பூர்வீகச் சொத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். பங்காளிச் சண்டை தீர்வுக்கு வரும். பிரபலங்களின் சந்திப்பால் மகிழ்ச்சியுண்டு. பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். புதன் தொடர்ந்து சாதகமான வீடுகளில் செல்வதால் அனுபவ அறிவாலும், சமயோஜித புத்தியாலும் சாதித்துக் காட்டுவீர்கள்

. குடும்பத்திலுள்ளவர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். ராசிக்கு 5ம் வீட்டில் ராசிநாதன் சூரியன் அமர்ந்ததால் லேசாக அடிவயிற்றில் வலி வரக்கூடும். நேரடியாக நீங்களே சென்று முடிப்பது நல்லது. பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் உழைத்து முன்னேறலாம், படிப்பிலே கூடுதல் கவனம் செலுத்தலாம், பொறுப்பாக நடந்துக் கொள்ளலாம் என்றெல்லாம் ஆதங்கப்பட்டுக் கொள்வீர்கள்.

17ம் தேதி முதல் 8ம் வீட்டிலேயே செவ்வாய் அமர்ந்திருப்பதால் கணவன்மனைவிக்குள் மனக்கசப்புகள் வரும்.

வதந்திகளை நம்பாதீர்கள். உங்கள் இருவருக்குள் வீண் சந்தேகத்தை ஏற்படுத்தி பிரிவை உண்டாக்க சிலர் முயற்சி செய்வார்கள். 5ம் வீட்டில் சனி தொடர்வதால் கர்ப்பிணிப் பெண்கள் எடைமிகுந்த பொருட்களை கவனமாக கையாளுவது நல்லது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். ஆனால் 6ல் கேது நிற்பதால் வழக்கு சாதகமாகும். எதிரிகள் பலவீனமடைவார்கள்.

அரசியல்வாதிகளே! ஆதாரமில்லாமல் எதிர்கட்சியினரை தாக்கிப் பேசாதீர்கள். வழக்குகளை சந்திக்க நேரிடும். கோஷ்டி பூசலால் உங்கள் புகழ் குறையும். மாணவர்களே! அறிவியல், கணிதம் பாடத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.

வகுப்பறையில் அரட்டைப் பேச்சை தவிர்க்கப் பாருங்கள்.

கன்னிப்பெண்களே! காதல் விவகாரத்தை தள்ளி வையுங்கள். உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். பெற்றோரின் ஆலோசனையின்றி எந்த முயற்சியும் வேண்டாம். நண்பர்களிடம் இடைவெளி விட்டு பழகுவது நல்லது. வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும்.

பங்குதாரர்களுடன் சின்ன சின்ன பிரச்னைகள் வரும். பணம் கொடுக்கல்வாங்கல் விஷயத்தில் வங்கிக் காசோலை, டி.டி மூலமாக செய்வது நல்லது. உரிய ஆவணங்கள் இல்லாமல் யாருக்கும் பண தர வேண்டாம். புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உணவு, வாகன வகைகளால் லாபம் அதிகரிக்கும்.

உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிகாரிகளுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும் என்றாலும் அநாவசியப் பேச்சுகளை குறைப்பது நல்லது. அதிகாரிகளுடன் வீண் விவாதங்களெல்லாம் வேண்டாம். சக ஊழியர்களுக்காக அதிகம் பரிந்துப் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள்.

கலைத்துறையினரே! எதிர்பார்த்த வாய்ப்புகள் தள்ளிப் போகும். கிசுகிசு தொல்லைகளும் வரும். சக கலைஞர்களுக்குள் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது.

விவசாயிகளே! பழைய கடனை நினைத்து கலங்காதீர்கள். மகசூல் பெருகும். பூச்சித் தொல்லை குறையும். நிதானமும், பொறுமையும் தேவைப்படும் மாதமிது.

ராசியான தேதிகள்:

டிசம்பர் 21,22,23,24 மற்றும் ஜனவரி 1,2,3,7,8,9,10.

சந்திராஷ்டம தினங்கள்:

டிசம்பர் 16,17 மற்றும் ஜனவரி 12,13,14ம் தேதி காலை 8.52 மணி வரை.

கன்னி

எறும்பு போல் அயராது உழைத்து, தேன்போல் சேமிக்கும் இயல்பு உடைய நீங்கள் எப்போதும் நல்லதே நினைப்பவர்கள். ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் இந்த மாதம் முழுக்க செல்வதால் திறம்பட செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். இழுபறியாக இருந்த வழக்குகளில் நல்ல மாற்றம் ஏற்படும்.

சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் நெஞ்சுறுதி அதிகரிக்கும். போராட்டங்களில் வெற்றியுண்டு. பிரபலங்களின் உதவி கிடைக்கும். பணப்பற்றாக்குறை விலகும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துபோவீர்கள். பிள்ளைகளின் போக்கில் அக்கறை செலுத்துவீர்கள்.

மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி கோலாகலமாக நடத்துவீர்கள். செவ்வாய் பகவான் 7ம் வீட்டில் நிற்பதால் பணபலம் கூடும். சகோதரங்கள் உறுதுணையாக இருப்பார்கள். ஆனால் உங்கள் ராசியை செவ்வாய் பார்ப்பதால் உடல் உஷ்ணத்தால் வேனல் கட்டி, சளித் தொந்தரவு, தொண்டை புகைச்சல் வந்து நீங்கும்.

சனி 4ம் வீட்டில் நீடிப்பதால் தாயாரின் உடல் நிலை பாதிக்கும். தாய்வழி சொத்துப் பிரச்னைகள் கொஞ்சம் சிக்கலாகி நல்ல விதத்தில் முடிவடையும். ஆனால் சூரியனும் 4ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தடைப்பட்ட கட்டுமானப் பணிகள் விரைந்து முடியும். வீடு கட்டுவதற்கு ப்ளான் அப்ரூவலாகி வரும். அரசால் ஆதாயம் உண்டு.

அரசியல்வாதிகளே! புதிய பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

கோஷ்டி பூசலிலிருந்து விடுபடுவீர்கள். தலைமைக்கு நெருக்கமாவீர்கள். மாணவர்களே! டி.வி., சினிமா எல்லாம் விட்டு விட்டு படிப்பில் முழு கவனம் செலுத்துங்கள்.

கேள்விக்கு விடை எழுதும் போது முக்கிய கீ ஆன்சரை மறந்துவிடாதீர்கள்.

கன்னிப்பெண்களே! நல்லவர்களின் நட்பு கிடைக்கும். கூடாப்பழக்கமுள்ளவர்களிடமிருந்து விடுபடுவீர்கள்.

கல்யாணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். ராகு லாப வீட்டில் நிற்பதால் வியாபாரத்தில் கடையை விரிவுப்படுத்துவது, அழகுப்படுத்துவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வாடிக்கையாளர்களை கவர விளம்பர யுக்திகளை கையாளுவீர்கள்.

நெருங்கிய நண்பர்கள் மூலமாக வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். புது பங்குதாரர்களும் வருவார்கள். கமிஷன், புரோக்கரேஜ், கிரானைட், மொசைக், டைல்ஸ் போன்ற வகைகளால் லாபமடைவீர்கள். குரு 3ல் நிற்பதால் உத்யோகத்தில் ஒரு தரமற்றப் போக்கு காணப்படும். மூத்த அதிகாரிகளின் மனநிலையைப் புரிந்துக் கொள்ள முடியாமல் தவிப்பீர்கள்.

சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சின்ன சின்ன பழிகள் வரக்கூடும். உங்கள் கடின உழைப்பிற்கு வேறு சிலர் உரிமைக் கொண்டாடுவார்கள்.

கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகள் வெளியாவதில் இருந்த தடைகள் நீங்கும். மக்களால் பாராட்டப்படுவீர்கள்.

விவசாயிகளே! மகசூல் பெருகும், பூச்சித் தொல்லை குறையும். சமயோஜித புத்தியாலும், கடந்த கால அனுபவங்களாலும் முன்னேறும் மாதமிது.

ராசியான தேதிகள்:

டிசம்பர் 16,17,23,24,25,26,27 மற்றும் ஜனவரி 1,3,4,5,10,11,12,13.

சந்திராஷ்டம தினங்கள்:

டிசம்பர் 18,19,20ம் தேதி காலை 8.06 மணி வரை.

துலாம்

எதையும் ஆற அமர யோசித்து முடிவெடுக்கும் போக்கு உடையவரான நீங்கள் நல்லது கெட்டது தெரிந்து செயல்படுபவர்களே. ராசிநாதன் சுக்கிரன் வலுவாக இருப்பதால் எதிர்ப்புகள் நீங்கும். ஆரோக்யம் கூடும். சமயோஜித புத்தியுடன் புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். குடும்பத்தினருடன் மனம்விட்டுப்பேசுவீர்கள். உங்கள் மகனுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும்.

ஊரே மெச்சும்படி சிறப்பாக திருமணத்தை நடத்த முடிவு செய்வீர்கள். புதனும் சாதகமாக இருப்பதால் புத்தி சாதுர்யத்துடன் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். வெகுநாட்களுக்குப் பிறகு உங்களின் பழைய நண்பர்களைச் சந்தித்து கடந்தகாலங்களைப் பற்றி பேசிமகிழ்வீர்கள்

3ம் வீட்டில் சூரியனும், சனியும் அமர்ந்திருப்பதால் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பெற்றோருடன் இருந்து வந்த கருத்து மோதல் விலகும். அரசு காரியங்கள் உடனடியாக முடியும்.

வழக்குகளில் இருந்த சிக்கல்கள் நீங்கி நல்ல தீர்ப்பு கிடைக்கும். 17ம் தேதி முதல் செவ்வாய் 6ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தன்னம்பிக்கை பெருகும். மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். சகோதரங்களுக்கிடையே அவ்வப்போது சலசலப்புகள், பிரச்னைகள் தலைத்தூக்கினாலும் மற்றொரு பக்கம் மகிழ்ச்சியும், பாசமும் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளே! அதிகாரிகளுக்கு பல ஆலோசனைகள் தருவீர்கள். பழைய வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். மாணவர்களே! வகுப்பறையில் அரட்டைப் பேச்சு வேண்டாம். விளையாட்டை குறைத்துக் கொள்ளுங்கள். படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

கன்னிப்பெண்களே! உங்களுடைய ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக இருப்பதால் யதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை உணருவீர்கள்.

பெற்றோரின் அறிவுரையில் உண்மையிருக்கிறது என்பதையும் புரிந்துக் கொள்வீர்கள். குரு சாதகமாக இருப்பதால் வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு அதற்கேற்ப சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

முதலீடுகளையும் மாற்றுவீர்கள். கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் பணம் வரும். உணவு, டெக்ஸ்டைல்ஸ், ஹார்டுவேர் வகைகளாலும் லாபம் வரும். பழைய பாக்கிகளை சாமர்த்தியமாக பேசி வசூலிப்பீர்கள். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

சக ஊழியர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். இடமாற்றம் சாதகமாகும். அதிக சம்பளத்துடன் புது வாய்ப்புகளும் கூடி வரும்.

கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகள் வெளியாகும்.

விவசாயிகளே! வற்றிய கிணறு சுரக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். மகசூல் பெருகும். கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும் மாதமிது.

ராசியான தேதிகள்:

டிசம்பர் 16,17,18,19, 25,26,27,28 மற்றும் ஜனவரி 3,4,5,6,8,10,12,13,14.

சந்திராஷ்டம தினங்கள்:

டிசம்பர் 20ம் தேதி காலை 8.06 மணி முதல் 21,22ம் தேதி நண்பகல் 12.42 மணி வரை.

விருச்சிகம்

நல்ல நிர்வாகத் திறனும், பரந்த அறிவும் கொண்ட நீங்கள், பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறியும் அசாத்தியத் திறனுள்ளவர்கள். சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் புதிய முயற்சிகளில் வெற்றியுண்டு. உங்களைப் பற்றி தவறாக நினைத்த உறவினர்கள், நண்பர்கள் இப்போது வழி வந்து உறவாடுவார்கள். வீட்டில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும்.

வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். பூர்வீகச் சொத்திலிருந்த சிக்கல்களை தீர்க்க வழி காண்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து தக்க சமயத்தில் உதவிகளும் கிடைக்கும். இந்த மாதம் முழுக்க சூரியன் 2ல் நிற்பதால் கண்ணில் அடிபடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இருசக்கர வாகனத்தை இயக்கும் போது தலைக்கவசம் அணிவது நல்லது.

சில உண்மைகளை சில இடங்களில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். அந்தரங்க விஷயங்களை வெளியிடாமல் தேக்கி வைப்பது நல்லது. அவ்வப்போது சாதுர்யமான பேச்சால் சாதித்துக் காட்டுவீர்கள்.

மனக்குழப்பங்கள் நீங்கும். 17ம் தேதி முதல் 5ம் வீட்டிலேயே செவ்வாய் அமர்ந்திருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பூர்வீக சொத்துப் பிரச்சனை தலைத்தூக்கும். பாகப்பிரிவினை விஷயத்தில் விட்டுக் கொடுத்துப் போங்கள்.

2ல் சனியும், ராசிக்குள் குருவும் அமர்ந்திருப்பதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் அதிகமாகும். செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள்.

அரசியல்வாதிகளே! பேச்சிலே கவனம் தேவை. எதிர்கட்சியினரை அத்துமீறி தாக்கிப் பேச வேண்டாம். கோஷ்டி அரசியலில் ஈடுபடாதீர்கள். மாணவர்களே! நண்பர்களின் ஆதரவுப் பெருகும். கலைப் போட்டிகளில் கலந்துக் கொண்டு வெற்றி பெறுவீர்கள்.

விளையாட்டிலும் பதக்கம் வெல்வீர்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்புக் கூடும். வகுப்பாசிரியரின் பாராட்டும் கிடைக்கும். கன்னிப்பெண்களே! காதல் விவகாரத்தை தள்ளி வைத்துவிட்டு உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள்.

பெற்றோரின் கனவுகளை நனவாக்க தவறாதீர்கள். மாதத்தின் பிற்பகுதியில் நல்லவர்களின் நட்பு கிடைக்கும். அழகு, இளமைக் கூடும். வியாபாரத்தில் ஓரளவு சூடுபிடிக்கும். பழைய வாடிக்கையாளர்கள் வருவார்கள்.

பங்குதாரர்களுடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வாடிக்கையாளர்களிடம் மனங்கோணாமல் நடந்துக் கொள்ளுங்கள். கெமிக்கல், மருந்து, உணவு, பெயின்ட் வகைகளால் லாபம் கூடும். உத்யோகத்தில் கடந்த மாதத்தை விட இந்த மாதத்தில் செல்வாக்குக் கூடும். வேலைச்சுமையும் குறையும்.

இடமாற்றமும் திருப்திகரமாக இருக்கும். உங்களுக்கு தொல்லைக் கொடுத்து வந்த அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். புது அதிகாரி உங்களுக்கு ஆதரவாக இருப்பார். சம்பள பாக்கியும் கைக்கு வரும்.

கலைத்துறையினரே! முடங்கிக் கிடந்த உங்களின் படைப்பு வெளியாவதற்கு சில முக்கியஸ்தர்கள் உதவுவார்கள். விவசாயிகளே! பூச்சித் தொல்லை குறையும். பக்கத்து நிலத்துக்காரருடன் இருந்த பகைமை நீங்கும். வருமானம் உயரும். கறாராகப் பேசி விட்டதைப் பிடிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்:

டிசம்பர் 18,19,20,21,27, 28,29,30 மற்றும் ஜனவரி 5,8,9,10,11,14.

சந்திராஷ்டம தினங்கள்:

டிசம்பர் 22ம் தேதி நண்பகல் 12.42 மணி முதல் 23,24 ம் தேதி பிற்பகல் 03.46 மணி வரை.

தனுசு

கடல்போல் விரிந்த மனசும், கலகலப்பாக பேசும் குணமும் உடைய நீங்கள் மனசாட்சிக்குட்பட்டு செயல்படுபவர்கள். புதன் சாதகமாக இருப்பதால் வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் உங்களைப் பற்றி மதிப்பார்கள். சுக்கிரன் சாதகமான வீடுகளில் இருப்பதால் எதிர்பார்த்திருந்த வகையில் பணம் வரும்.

பேச்சில் கம்பீரம் பிறக்கும். அதிரடியான திட்டங்களை தீட்டி அனைவரையும் அசத்துவீர்கள். தொழிலில் முடக்கம், எதிலும் ஆர்வமின்மை நிலை மாறும். பூர்வீகச் சொத்து கைக்கு வந்துசேரும். உங்கள் ராசிக்குள் சூரியன் நுழைந்திருப்பதால் இந்த மாதத்தில் ஆரோக்யத்தில் அதிக அக்கறை காட்டுவது நல்லது.

தந்தையாருடன் கருத்து மோதல்கள் வரும். நடந்து முடிந்துப் போன சம்பவங்களைப் பற்றி இப்போது பேசிக் கொண்டிருக்காதீர்கள்.

17ம் தேதி முதல் உங்களுடைய சுகஸ்தானமான 4ம் வீட்டில் செவ்வாய் அமர்ந்திருப்பதால் சில காரியங்கள் தடைப்பட்டு முடிவடையும். முதல் முயற்சியிலேயே எந்த வேலைகளையும் முடிக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும்.

ஏழரைச் சனியும், 12ல் குருவும் நடைபெறுவதால் கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்கள், அவமானங்கள் இவற்றையெல்லாம் அவ்வப்போது நினைத்து ஆதங்கப்படுவீர்கள். அரசியல்வாதிகளே! எதிர்கட்சியினரும் மதிக்கும்படி சில கருத்துக்களை வெளியிடுவீர்கள். உங்கள் அறிவுப்பூர்வமான, சாதுர்யமான பேச்சை கேட்டு சகாக்கள் மகிழ்வார்கள்.

மாணவர்களே! நினைவாற்றல் கூடும். படிப்பில் முன்னேறுவீர்கள். வகுப்பாசிரியர், விளையாட்டு, கலைப் போட்டிகளில் கலந்துக் கொண்டு வெற்றி பெறுவீர்கள். கன்னிப்பெண்களே! உங்களின் புதிய திட்டங்கள் நிறைவேறும். முன்கோபம் குறையும்.

உயர்கல்வியில் முன்னேறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் பெருகும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். வேலையாட்கள் அடிக்கடி விடுப்பில் செல்வார்கள். கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். இரும்பு, கட்டிட உதிரி பாகங்கள், கெமிக்கல், லெதர் வகைகளால் லாபம் கூடும்.

உத்யோகத்தில் கூடுதல் பொறுப்பும், பதவியும் தேடி வரும். சக ஊழியர்களுடன் இருந்த கருத்து மோதல்கள் நீங்கும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சிலருக்கு புது உத்யோக வாய்ப்புகளும் கூடி வரும். உத்யோகம் சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாகும்.

கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகள் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்படும். விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். பெரிய வாய்ப்புகளும் கூடி வரும். விவசாயிகளே! எலித் தொல்லை, பூச்சித் தொல்லை குறையும். பக்கத்து நிலத்துக்காரருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். தன்னிச்சையான முடிவுகளாலும், விரைந்து செயல்படுவதாலும் வெற்றி பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்:

டிசம்பர் 16,21,22,23,30,31 மற்றும் ஜனவரி 1,2,8,9,10,12

சந்திராஷ்டம தினங்கள்:

டிசம்பர் 24ம் தேதி பிற்பகல் 03.46 மணி முதல் 25,26ம் தேதி மாலை 6.05மணி வரை.

மகரம்

வீரத்துடன் விவேகமாகவும் செயல்படும் நீங்கள், செய்நன்றி மறவாதவர்கள். கலகலப்பாகப் பேசுவதுடன் கறாராகவும் இருப்பீர்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் தைரியமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள். அரசு காரியங்களில் கொஞ்சம் அலைச்சல் இருந்தாலும் விடாப்பிடியாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். ஆன்மிக பயணங்கள் சென்று வருவீர்கள்.

அதிரடி திட்டங்களை பூர்த்தி செய்வீர்கள். வருங்காலத்திற்கான ஏற்பாடுகளை செய்து முடிப்பீர்கள். இந்த மாதம் முழுக்க 12ல் சூரியன் மறைந்திருப்பதால் திடீர் பயணங்கள், 17ம் தேதி முதல் செவ்வாய் 3ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடிப்பீர்கள். தொட்ட காரியங்கள் துலங்கும். வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் கூடும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. கணவன்மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும்.

ஆனால் ஏழரைச் சனி நடைபெறுவதாலும் தூக்கம் அவ்வப்போது குறையும். வரவுக்கு மிஞ்சிய செலவுகளும் இருக்கும். விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள். புதன் சாதகமாக இருப்பதால் புத்துணர்ச்சி பெருகும்.

எவ்வளவு பேராயும் சில வேலைகளை முடிக்கமுடியாமல் திணருனீர்களே! இனி விரைந்துமுடிக்கும் அளவிற்கு நேரங்காலமும் முழுஒத்துழைப்பு தரும். அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசலில் இறங்காதீர்கள். எதிர்கட்சிக்காரர்களிடம் உங்கள் கட்சி விஷயங்களை பகிர்ந்துக் கொள்ளாதீர்கள்.

மாணவர்களே! படிப்பில் மட்டுமின்றி விளையாட்டு, கலைப் போட்டிகளிலும் கலந்துக் கொண்டு பரிசு, பாராட்டுப் பெறுவீர்கள். பயணங்களால் மகிழ்ச்சியடைவீர்கள். கன்னிப்பெண்களே! காதல் கசந்து இனிக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணருவீர்கள். உயர்கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். அலர்ஜி, இன்ஃபெக்ஷன் குறையும்.

குருபகவான் உங்கள் ராசிக்கு சாதகமாக இருப்பதால் வியாபாரத்தில் கடையை விரிவுப்படுத்துவதற்கு, புதிய சரக்குகள் கொள்முதல் செய்வதற்கு பண உதவிகள் கிடைக்கும். வேலையாட்களின் பிடிவாதப் போக்கு மாறும். உங்களின் புதிய திட்டங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். இரும்பு, கட்டிடம், உணவு, மருந்து, ஆடை வகைகளால் லாபம் வரும். உத்யோகத்தில் செல்வாக்குக் கூடும். சக ஊழியர்களால் சின்ன சின்ன பிரச்னைகள் தலைத்தூக்கினாலும் சாதுர்யமாகப் பேசி சரி செய்வீர்கள்.

தலைமையுடன் மோதல் வரும். ஒருதலை பட்சமாக மூத்த அதிகாரி நடந்துக் கொள்கிறார் என்று நினைப்பீர்கள். மறைமுக அவமானங்கள் வரும். அலுவலக ரகசியங்களை வெளியே சொல்ல வேண்டாம். அதிகாரிகளை விமர்சித்தும் வெளிவட்டாரத்தில் பேச வேண்டாம்.

கலைத்துறையினரே! முடங்கிக் கிடந்த படைப்புகள் வெளியாகும். மூத்த கலைஞர்களின் ஆதரவால் முன்னேறுவீர்கள். விவசாயிகளே! பூச்சித்தொல்லை, எலித்தொல்லையை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்தப் பாருங்கள். நவீன ரக உரங்களைப் பயன்படுத்தி மகசூலை பெருக்குவீர்கள். தடைகளும், மனஉளைச்சலும் குறைந்து வளர்ச்சிப் பாதையில்பய ணிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்:

டிசம்பர் 16,17,18,19,24,25,31 மற்றும் ஜனவரி 1,2,3,4,5,10,11,12,13,14

சந்திராஷ்டம தினங்கள்:

டிசம்பர் 26ம் தேதி மாலை 06.05 மணி முதல் 27,28ம் தேதி இரவு 08.47 மணி வரை.

கும்பம்


தென்றலாய் காணப்பட்டாலும் அவ்வப்போது புயலாய் மாறும் நீங்கள் பேச்சிலும், செயலிலும் வேகத்தைக் காட்டுபவர்கள். சூரியன் இந்த மாதம் முழுக்க லாபஸ்தானத்தில் நிற்பதால் நாடாளுபவர்கள் அறிமுகமாவார்கள். மனைவிவழியில் உதவிகள் கிடைக்கும். மனைவிவழி உறவினர்களும் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள்.

வேலை கிடைக்கும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய கடன் பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். தொலைநோக்குச் சிந்தனையுடன் செயல்படுவீர்கள்.

வி.ஐ.பிகள் தொடர்பு, அந்தஸ்து உயரும். பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். கன்னிப்பெண்களுக்கு தடைபட்ட கல்யாணம் கூடி வரும். பெற்றோரின் பாசமழையில் நனைவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.

உங்களைச் சுற்றியிருந்தவர்களால் இருந்து வந்த தொந்தரவுகள் விலகும். 17ம் தேதி முதல் செவ்வாய் 2ம் வீட்டில் நிற்பதால் கார சாரமாக பேசுவீர்கள். சில நேரங்களில் பேச்சால் நல்லது நடக்கவும் வாய்ப்பிருக்கிறது. பிரச்னைகள் வரவும் வாய்ப்பிருக்கிறது. எனவே இடம், பொருள், ஏவலறிந்து பேசுவது நல்லது. சகோதர வகையில் கொஞ்சம் அலைச்சல் இருக்கும்.

புதன் வலுவாக இருப்பதால் பிள்ளைகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். உத்யோகத்தின் பொருட்டு உங்கள் மகன் வெளிநாடு, அண்டை மாநிலம் செல்லவும் வாய்ப்பிருக்கிறது. அரசியல்வாதிகளே! பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கட்சி தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். மாணவர்களே! மதிப்பெண் கூடும். புதியவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள்.

கன்னிப்பெண்களே! போட்டித் தேர்வுகள், நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. கல்யாணத் தடைகள் நீங்கும். வியாபாரம் தழைக்கும். பற்று வரவு உயரும். பழைய பாக்கிகள் வசூலாகும். புது வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள்.

பழைய பங்குதாரர்கள் மீண்டும் வருவார்கள். புது பங்குதாரரும் அறிமுகமாவார். புதிதாக முதலீடு செய்யலாம். ஏற்றுமதிஇறக்குமதி, ஷிப்பிங், கன்ஸ்ட்ரக்சன் வகைகளால் பணம் வரும். உத்யோகத்தில் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். என்றாலும் குரு 10ல் நிற்பதால் பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதமாகும்.

எதிர்பார்த்த இடமாற்றம் வந்து சேரும். சிலருக்கு புது உத்யோக வாய்ப்புகளும் கூடி வரும். கலைத்துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். விவசாயிகளே! அரசாங்க சலுகைகளை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். வீட்டில் நல்லது நடக்கும். திடீர் திருப்பங்களும், யோகங்களும் நிறைந்த மாதமிது.

ராசியான தேதிகள்:

டிசம்பர் 16,17,18, 19,25,26,27 மற்றும் ஜனவரி 3,4,5,6.

சந்திராஷ்டம தினங்கள்:

டிசம்பர் 28ம் தேதி இரவு 08.47 மணி முதல் 29,30ம் தேதி வரை.

மீனம்

மனிதர்களின் மனநிலையை நொடிப்பொழுதில் புரிந்துகொள்ளும் அசாத்திய ஆற்றல் கொண்ட நீங்கள், துவண்டு வருவோருக்கு தோள் கொடுக்கும் சுமைதாங்கிகள். சுக்கிரன் வலுவாக இருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள்.

பழைய கடனுக்கெல்லாம் முடிவு கட்டுவீர்கள். வீட்டில் எதற்கெடுத்தாலும் வம்பு சண்டைகள் வெடித்ததே! இனி உங்களின் வழிகாட்டலின் பேரில் குடும்பத்தினர் பின்பற்றுவார்கள். சந்தோஷம் குடி கொள்ளும். உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் சூரியனும், சனியும் வலுவாக வந்தமர்ந்திருப்பதால் எதிரிகளை வீழ்த்துவீர்கள்.

வழக்குகள் சாதமாகும். தந்தைவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். வேலை கிடைக்கும். ஆனால் உங்கள் ராசியிலேயே செவ்வாய் அமர்ந்திருப்பதால் முன்கோபம் அதிகமாகும். உடல் உஷ்ணத்தால் வேனல் கட்டி வரக்கூடும். சிலருக்கு அடிவயிற்றில் வலி, கண் வலி, சின்ன சின்ன நெருப்புக் காயங்களெல்லாம் வந்து நீங்கும்.

சிறுசிறு விபத்துகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. புதன் வலுவாக வீடுகளில் பயணிப்பதால் தைரியம், புத்திசாலித்தனம் வெளிப்படும். சொத்து சம்பந்தமான வழக்குகள் சாதகமாக அமையும். புதிய வீடு, மனை வாங்குவீர்கள். புதிய வீட்டை கட்டி முடிப்பீர்கள். அரசு காரியங்களில் வெற்றி கிட்டும்.

ராசிநாதன் குருபகவான் 9ல் வலுவாக அமர்ந்திருப்பதால் ஷேர் மூலம் பணம் வரும். தந்தைவழியில் மதிப்பு, மரியாதை கூடும். அரசியல்வாதிகளே! புதிய பொறுப்புகள் தேடி வரும். தலைமை உங்களை அழைத்துப் பேசும். தலைமை உங்களுக்கு முக்கியத்துவம் தரும்.

மாணவர்களே! ஆசிரியரின் பாராட்டைப் பெறுவீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி அடைவீர்கள். கன்னிப்பெண்களே! நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புது வேலை கிடைக்கும். காதல் கைக்கூடும்.

கேது லாப வீட்டில் நிற்பதால் வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. கடையை விரிவுப்படுத்துவீர்கள், அழகுப்படுத்துவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்களிடம் நற்பெயரை சம்பாதிப்பீர்கள். பங்குதாரர்கள் வளைந்து வருவார்கள். துரித உணவகம், தேங்காய் மண்டி, ஸ்டேஷனரி வகைகளால் லாபம் வரும். என்றாலும் வேலையாட்களால் அவ்வப்போது அலைக்கழிக்கப்படுவீர்கள்.

உத்யோகத்தில் பிரச்னைக் கொடுத்து வந்த அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். செல்வாக்குக் கூடும். சிலருக்கு புது வாய்ப்புகளும் வரும். வெளிநாட்டில், அண்டை மாநிலத்தில் வேலை கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. கலைத்துறையினரே! உங்களுடைய புதிய படைப்புகள் பாராட்டிப் பேசப்படும். விவசாயிகளே! நவீன யுக்திகளை கையாண்டு லாபமடைவீர்கள். அதிரடி திட்டங்கள் நிறைவேறுவதுடன் அந்தஸ்தும் ஒருபடி அதிகரிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்:

டிசம்பர் 19,21, 22,23, 24,27,28,29 மற்றும் ஜனவரி 5,6,7,8,10,14.

சந்திராஷ்டம தினங்கள்:

டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1ம் தேதி வரை.
Name

2019 New Year Rasi Palan,7,2019 Tamil New year Rasi Palan,2,latest,1,Nallur kovil,12,shirdi sai baba,1,ஆலய அறிவித்தல்கள்,2,ஆலயதரிசனம்,41,ஆன்மீகம்,132,இம்மாத பலன்,8,இவ்வார பலன்,2,ஏழரை சனி,1,குரு பெயர்ச்சி பலன்கள் 2019,1,குருபெயர்ச்சி பலன்கள்,17,சுக்ரன் பெயர்ச்சி பலன்கள்,2,விரதம்,3,வீடியோ,1,ஜோதிடம்,138,
ltr
item
Astrology Yarldeepam: மார்கழி மாத ராசிபலன்கள்: எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்? எந்தெந்த ராசியினருக்கு எச்சரிக்கை
மார்கழி மாத ராசிபலன்கள்: எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்? எந்தெந்த ராசியினருக்கு எச்சரிக்கை
https://2.bp.blogspot.com/-H1MT76qu3h8/XBTVAuspUPI/AAAAAAAAJ1Y/JZqJ4HpkjsU3hVX4BXkpOwofESP5ipDuwCK4BGAYYCw/s640/maarkali%2Braasi%2Bpalan.jpg
https://2.bp.blogspot.com/-H1MT76qu3h8/XBTVAuspUPI/AAAAAAAAJ1Y/JZqJ4HpkjsU3hVX4BXkpOwofESP5ipDuwCK4BGAYYCw/s72-c/maarkali%2Braasi%2Bpalan.jpg
Astrology Yarldeepam
http://astrology.yarldeepam.com/2018/12/blog-post.html
http://astrology.yarldeepam.com/
http://astrology.yarldeepam.com/
http://astrology.yarldeepam.com/2018/12/blog-post.html
true
2040982477258416527
UTF-8
அனைத்து பதிவுகளையும் பார்க்க Not found any posts அனைத்தையும் பார்க்க மேலும் படிக்க Reply Cancel reply Delete By முகப்பு PAGES POSTS அனைத்தையும் பார்க்க உங்களுக்கான பரிந்துரைகள் செய்தி பிரிவுகள் ARCHIVE தேடுக அனைத்து பதிவுகள் நீங்கள் தேடியது எங்களிடம் இருக்கும் பதிவுகளுடன் பொருந்தவில்லை Back Home ஞாயிற்றுக்கிழமை திங்கட்கிழமை செவ்வாய்க்கிழமை புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை சனிக்கிழமை ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன வெள்ளி சனி January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 நிமிடத்திற்கு முன்னர் $$1$$ minutes ago 1 மணிநேரத்திற்கு முன்னர் $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy