2019 புத்தாண்டு பலன்கள்: ரிஷப ராசியினரே இந்த ஆண்டு உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும்

SHARE:




பிறர் செய்ய முடியாத சவாலான காரியங்களை சாதித்துக் காட்டுவதில் வல்லவர்களான நீங்கள், சிறந்த பேச்சாளர்கள்.

சுற்றியிருப்பவர்களின் சுகத்திற்காக தன்னை அற்பணித்துக் கொள்ளும் நீங்கள், பல நேரங்களில் தாமரை இலைத் தண்ணீர் போல் இருப்பீர்கள்.

உங்கள் ராசிக்கு 6வது ராசியில் இந்தாண்டு பிறப்பதால் எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கனிவான பேச்சு வேலைக்காகாது, இனி கறாராகத் தான் பேச வேண்டுமென்ற முடிவுக்கு வருவீர்கள்.

ஏதாவது காரியமாக வேண்டுமென்றால் உங்கள் காலை பிடிப்பதும், கையைப்பிடிப்பதுமாக இருந்தவர்களையெல்லாம் ஒத்துக்கித்தள்ளுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். சேமிக்கும் அளவிற்கு வருவாய் அதிகரிக்கும்.

பழுதான சாதனங்களை மாற்றுவீர்கள். அடிப்படை வசதிகள் பெருகும். கணவன் மனைவிக்குள் பாசம் அதிகரிக்கும். மனைவி வழி உறவினர்களால் ஆதாயமுண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். என்றாலும் 6ல் ராசிநாதன் நிற்கும் போது இந்தஆண்டு பிறப்பதால் திடீர் பயணங்களும், செலவுகளும் அதிகரிக்கும்.

கல்யாணம், கிரக பிரவேசம், சீமந்தம் என வீடு களை கட்டும். வற்றிய பணப்பை நிரம்பும். விலகிச் சென்ற பழைய சொந்த பந்தங்கள் இனி தேடி வருவார்கள். நண்பர்களின் ஒத்துழைப்பும் உண்டு. விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் சேரும். நெடுநாட்களாக திட்டமிட்டுக் கொண்டிருந்த சில காரியங்கள் இப்போது முடியும். உங்கள் ராசிக்கு லாப வீட்டில் செவ்வாய் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால் உங்களின் நிர்வாகத்திறன் அதிகரிக்கும்.

தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். மனைவி வழியில் மதிப்பு கூடும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். 1.1.2019 முதல் 12.02.2019 வரை உங்கள் ராசிக்கு 9ல் கேது நிற்பதால் தந்தைக்கு மருத்துவச் செலவுகளும், அவருடன் வீண் விவாதங்களும் வந்து போகும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து விலகும்.

உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். ஆனால் 3ம் வீட்டில் ராகு இருப்பதால் துணிச்சல் பிறக்கும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் வரும். திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. அரசியலில் செல்வாக்கு உயரும். சொத்து சேரும். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். 13.02.2019 தேதி முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 2ல் ராகுவும், 8ம் வீட்டில் கேதுவும் தொடர்வதால் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும். பேச்சில் கடுமை காட்டாதீர்கள்.

நீங்கள் யதார்த்தமாகப் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்து கொள்வார்கள். வாகனத்தை இயக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா, ப்ரேக் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். சிறுசிறு விபத்துகளும் வந்து போகும். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். வீண் பழிக்கு ஆளாவீர்கள். இந்த ஆண்டு தொடக்கம் முதல் 12.03.2019 வரை மற்றும் 19.05.2019 முதல் 27.10.2019 வரை குருபகவான் 7ம் வீட்டில் அமர்ந்து உங்களைப் பார்ப்பதால் உங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.

அழகு, அறிவு கூடும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். ஒத்து வராத, உதவாத, உண்மையில்லாத உறவுகளை ஒதுக்கித் தள்ளுவீர்கள்.

ஆனால் 13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசார வக்ரமாகியும் மற்றும் 28.10.2019 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் மறைவதால் உங்களைப் பற்றிய வதந்திகள் வரும். திடீர் பயணங்கள் இருக்கும். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம்.

சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். முக்கிய ஆவணங்களை கவனக் குறைவாக கையாள வேண்டாம். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகளும் வந்து நீங்கும்.

தாய்வழி சொத்தை பெறுவதில் சிக்கல்கள் வந்து செல்லும். பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். இந்த ஆண்டு முழுக்க சனி 8ல் நின்று அஷ்டமத்துச் சனியாக வருவதால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். ஏமாந்து போன தொகையை நினைத்து வருத்தப்படுவீர்கள்.

கன்னிப்பெண்களே!
நல்லவர்களைப் போல் சிலர் நடித்து ஏமாற்ற முயற்சி செய்வார்கள். காதல் கைகூடும். பெற்றோரின் அறிவுரைகள் இப்போது கசந்தாலும் பின்னர் இனிக்கும். திருமணம் கொஞ்சம் தாமதமாகி முடியும். விடுபட்ட பாடத்தை முடித்து உங்கள் தகுதிக் கேற்ப நல்ல வேலையில் சேருவீர்கள். ஆடை அணிகலன்கள் சேரும்.

மாணவர்களே!
தேர்வில் வெற்றியுண்டு என்று தப்புக்கணக்கு போடாமல், சதா படித்து, எழுதிப் பார்ப்பது நல்லது. எதிர்பார்த்தபடி நல்ல கோர்ஸில் சேருவீர்கள். அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பும் தேடி வரும். உயர்கல்வியில் வெற்றியுண்டு.

அரசியல்வாதிகளே!
உங்களின் நடவடிக்கைகளை தலைமை உற்று நோக்கும். உட்கட்சிப் பூசலில் தள்ளியே இருங்கள்.

வியாபாரிகளே!
கடையை விரிவுபடுத்தி, பெரிய முதலீடுகளை போட்டு நஷ்டப்பட்டீர்களே! இனி வாடிக்கையாளர்களின் தேவையறிந்து கொள்முதல் செய்வீர்கள். நீண்ட நாளாக நினைத்திருந்த மாற்றங்களை உடனே செய்வீர்கள். வானொலி விளம்பரம், தொலைக்காட்சி விளம்பரங்களால் வியாபாரத்தை பெருக்குவீர்கள்.

கொடுக்கல்வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். மற்றவர்களின் ஆலோசனையை ஒதுக்கித் தள்ளுங்கள். உங்கள் அனுபவ அறிவை பயன்படுத்துங்கள்.

வேலையாட்களிடம் கறாராக இருங்கள். மெடிக்கல், எலக்ட்ரானிக்ஸ், பெட்ரோ கெமிக்கல் வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்கள் முரண்டு பிடிப்பார்கள். பழைய பங்குதாரரை மாற்றுவீர்கள். புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.

உத்யோகஸ்தர்களே! உங்களை கசக்கிப் பிழிந்து, உருக்குலைய வைத்த மேலதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். தள்ளிப் போன பதவியுயர்வு, சம்பள உயர்வு இனி தடையில்லாமல் கிடைக்கும். உங்களின் திறமையைக் கண்டு உயரதிகாரி வியப்பார். இனி அநாவசியமாக விடுப்பு எடுக்கமாட்டீர்கள். அவ்வப் போது மற்றவர்களின் பணிகளையும் சேர்த்துப் பார்க்க நேரிடும்.

சக ஊழியர்களில் சிலர் உங்களைப் பற்றி மேலதிகாரியிடம் குறை கூறுவார்கள். அலுவலகத்தின் எல்லா நடவடிக்கைகளிலும் உஷாராக இருங்கள். கணினி துறையினர்களே! தற்சமயம் நீங்கள் பணிபுரியும் அலுவலகத்திலிருந்து தலைமை அலுவலத்திற்கு மாற்றப்படுவீர்கள். சம்பளம் உயரும்.

கலைஞர்களே!
உங்களுக்கு வாய்ப்புத் தருவதாக சில நிறுவனங்கள் இழுத்தடிக்கும். வீண் கிசுகிசுக்களும், புகார்களும் வரும். என்றாலும் மூத்த கலைஞர்களின் நட்பை பெறுவீர்கள்.

விவசாயிகளே!
பக்கத்து நிலத்துக்காரரை அனுசரித்து போங்கள். கடனுதவி கிடைக்கும். நெல், கரும்பு சாகுபடியால் நல்ல லாபமடைவீர்கள். அலைச்சலும், பணப்பற்றாக்குறையும் முற்பகுதியில் இருந்தாலும் மையப் பகுதி முதல் திடீர் திருப்பங்கள் தரும் வருடமாகும்.

Facebook Follow

Name

2019 New Year Rasi Palan,7,2019 Tamil New year Rasi Palan,2,latest,1,Nallur kovil,12,shirdi sai baba,1,ஆலய அறிவித்தல்கள்,2,ஆலயதரிசனம்,41,ஆன்மீகம்,126,இம்மாத பலன்,8,இவ்வார பலன்,1,ஏழரை சனி,1,குரு பெயர்ச்சி பலன்கள் 2019,1,குருபெயர்ச்சி பலன்கள்,17,சுக்ரன் பெயர்ச்சி பலன்கள்,1,விரதம்,3,வீடியோ,1,ஜோதிடம்,118,
ltr
item
Astrology Yarldeepam: 2019 புத்தாண்டு பலன்கள்: ரிஷப ராசியினரே இந்த ஆண்டு உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும்
2019 புத்தாண்டு பலன்கள்: ரிஷப ராசியினரே இந்த ஆண்டு உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும்
https://1.bp.blogspot.com/-TNXueJKlSpQ/XCBUxZlpwZI/AAAAAAAAJ8g/vUlj8qt6Q6osTQpnBKYd5ze84089tSguwCK4BGAYYCw/s640/risabam%2B2019%2Brasipalan.jpg
https://1.bp.blogspot.com/-TNXueJKlSpQ/XCBUxZlpwZI/AAAAAAAAJ8g/vUlj8qt6Q6osTQpnBKYd5ze84089tSguwCK4BGAYYCw/s72-c/risabam%2B2019%2Brasipalan.jpg
Astrology Yarldeepam
http://astrology.yarldeepam.com/2018/12/2019_3.html
http://astrology.yarldeepam.com/
http://astrology.yarldeepam.com/
http://astrology.yarldeepam.com/2018/12/2019_3.html
true
2040982477258416527
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy