
எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாது சந்தர்ப்ப சூழ்நிலையை உணர்ந்து சமயோஜித புத்தியுடன் பேசும் நீங்கள் அடங்கி எழுபவர்கள்.
தும்பைப் பூப்போல சிரிப்பு, துடிப்பான செயல்திறனும் கொண்ட நீங்கள், நம்பி வந்தவர்களை ஒருபோதும் கை விட மாட்டீர்கள்.
உங்களுக்கு சுக வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்தஆண்டு பிறப்பதால் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும்.
கல்யாணம், சீமந்தம், காதுகுத்து என வீடு களைக்கட்டும். கனிவான பேச்சாலேயே காரியங்களை சாதிப்பீர்கள். பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் வரும். நவீன எலட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள்.
தங்க ஆபரணம்,விலையுயர்ந்த ஆடை வாங்குவீர்கள். தடைப்பட்ட வீடு கட்டும் பணியை தொடங்க வங்கி லோன் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று நேர்த்திக்கடனை முடிப்பீர்கள்.
இந்த புத்தாண்டு பிறக்கும் போது செவ்வாய் 9ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தொட்ட காரியம் துலங்கும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். பாதிபணம் தந்து முடிக்காமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். மகளின் கல்யாணத்திற்காக வரன் தேடி ஓய்ந்தீர்களே! இனி நீங்கள் எதிர்பார்த்த விதத்தில் நல்ல மணமகன் அமைவார்.
கல்யாணத்தை வி.ஐ.பிகள் முன்னிலையில் நடத்துவீர்கள். சகோதரிக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். தந்தையார் சில நேரங்களில் கோபப்படுவார். நவீன ரக மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள்.
12.02.2019 வரை ராசிக்கு 7ல் கேதுவும், உங்கள் ராசிக்குள்ளேயே ராகுவும் நிற்பதால் மூச்சுத் திணறல், அல்சர், ரத்த சோகை வந்துச் செல்லும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும். மனைவி உணர்ச்சிவசப்பட்டு பேசினால் அதைப் பெரிதுபடுத்திக் கொண்டு பதிலுக்கு பதில், ஏட்டிக்கு போட்டியாக ஏதாவது சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போங்கள்.
முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்பப்பையில் கட்டி வந்து நீங்கும். 13.02.2019 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசியை விட்டு ராகு விலகி 12ம் வீட்டிலும், கேது 6ம் வீட்டிலும் அமர்வதால் மனப்போராட்டங்கள் ஓயும். கணவன் மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும்.
கோயில் கும்பாபிஷேகத்தை எடுத்து நடத்துவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். பழைய சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். சோர்வு, சலிப்பு நீங்கி உற்சாகத்துடன் வளம் வருவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணருவீர்கள். வேற்று மதத்தவர், வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். இந்த ஆண்டு பிறப்பு முதல் 12.03.2019 வரை மற்றும் 19.05.2019 முதல் 27.10.2019 வரை குரு உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் நிற்பதால் நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.
பழைய சிக்கல்கள், பிரச்னைகளெல்லாம் ஒவ்வொன்றாக தீரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்யோகம் அமையும்.
குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை நிறைவேற்றுவீர்கள். ஆனால் 13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசார வக்ரமாகியும் மற்றும் 28.10.2019 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு குரு 6ம் வீட்டில் மறைவதால் சின்னச் சின்ன காரியங்களைக் கூட இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும்.
எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து விலகும். வி.ஐ.பிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். சட்ட விதிகளை மீறி யாருக்கும் உதவ வேண்டாம். சிலர் தங்களின் ஆதாயத்திற்காக உங்களைப் பற்றிய தவறான வதந்திகளைப் பரப்புவார்கள். இந்தஆண்டு முழுக்க சனி 6ம் வீட்டிலேயே நீடிப்பதால் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் வேலையைத் தொடங்குவீர்கள்.
வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். சொத்து சேரும். தந்தையாருடனான கருத்து மோதல்கள் நீங்கும். அவருக்கு இருந்த நோய் விலகும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். புது வேலை கிடைக்கும். வேற்று மதத்தவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.
கன்னிப்பெண்களே!
காதல் விவகாரத்தில் தள்ளி இருங்கள். தடைபட்ட கல்வியை போராடி முடிப்பீர்கள். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறவேண்டாம். புதிய வேலை கிடைக்கும்.
மாணவர்களே!
ஏனோ தானோ என்று படிக்காமல் முழு கவனத்தையும் செலுத்துங்கள். நல்ல நட்புச் சூழலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
அரசியல்வாதிகளே!
கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். அநாவசியமாக மேலிடத்தைப் பற்றி விமர்சிக்க வேண்டாம்.
வியாபாரிகளே!
அதிக முதலீடு செய்து சிக்கிக் கொள்ளாதீர்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த சலுகை திட்டங்களை அறிவிப்பீர்கள். அனுபவமிகுந்த வேலையாட்களை சேர்ப்பீர்கள். நன்கு அறிமுகமானவர்களானாலும் கடன் தரவேண்டாம். புரோக்கரேஜ், ஏஜென்ஸி வகைகளால் ஆதாயம் உண்டு.
கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உங்களை கோபப்படுத்தும்படி பேசினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். என்றாலும் லாபம் உண்டு. உணவு, இரும்பு, கட்டிட பொருட்கள், கமிஷன், ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயமடைவீர்கள்.
உத்யோகஸ்தர்களே!
அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மற்றவர்கள் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்கப்போய் சக ஊழியர்களுடன் மனத்தாங்கல் வரும். என்ன தான் இரவு பகலாக உழைத்தாலும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என வருந்துவீர்கள். விரும்பமில்லாத இடமாற்றம் உண்டு. மேலதிகாரியுடன் அவ்வப்போது மனஸ்தாபங்கள் இருந்தாலும் அனுசரித்துப் போங்கள்.
கலைஞர்களே!
புதிய நிறுவனங்கள் வாய்ப்பளிக்கும். உங்கள் வெற்றி தொடரும். அரசு பாராட்டும்.
விவசாயிகளே!
சென்றாண்டில் ஏற்பட்ட இழப்பை இப்போது சரி கட்டுவீர்கள். மரப்பயிர்களால் காசுபணம் பார்ப்பீர்கள். வீட்டில் நல்லது நடக்கும். ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவதுடன், முன்கோபத்தையும், வீண் சந்தேகத்தையும், இரவு நேரப் பயணங்களையும் தவிர்க்க வேண்டிய வருடமிது.