2019 புத்தாண்டு நட்சத்திர பலன்கள்: 6 நட்சத்திரக்காரர்களில் யாருக்கு அதிர்ஷ்டம்? எதில் எச்சரிக்கை?

SHARE:


2019 புத்தாண்டு நட்சத்திர பலன்கள் கீழே உள்ள 6 நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும்,

அசுவினி நட்சத்திர அன்பர்களே!

ஏற்றத்தாழ்வு பார்க்காமல் எல்லோரிடமும் சமமாகப் பழகும் குணம் கொண்ட அசுவினி நட்சத்திர அன்பர்களே!

இந்த புத்தாண்டில் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி, நன்மதிப்பு பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம்.

உடற் சோர்வுகள் வரலாம். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண்டாகும். குருவின் சஞ்சாரத்தால் வீடு, வாகனம் தொடர்பான செலவு குறையும். வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை.

தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்த தடங்கல்கள் நீங்கும். சாதூர்யமான பேச்சு வியாபார விருத்திக்கு கைகொடுக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணி தொடர்பாக அலைய நேரிடலாம்.

குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்னைகள் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்ய முற்படுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும்.

பெண்கள் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சாதூர்யமான பேச்சு வெற்றிக்கு உதவும். அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் ஆதரவு கூடுதலாக கிடைக்கும். மற்றவர்களுக்கு முன் ஜாமீன் போடும் முன் யோசிக்கவும்.

கலைத்துறையினர் வெற்றி மேல் வெற்றி காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாணவர்கள் பாடங்களை நன்கு படித்து மற்றவர்களின் மதிப்புக்கு ஆளாவீர்கள். திறமையான செயல்பாடுகள் வெற்றிக்கு உதவும்.

நன்மை : சொத்து சம்பந்தமான பிரச்னைகளில் தீர்வு.

எச்சரிக்கை: வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை.

பரிகாரம்:
தினமும் விநாயகர் அகவல் படித்து ஸ்ரீகணபதியை வணங்க எதிர்ப்புகள் விலகும். போட்டிகள் குறையும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும்.

பரணி நட்சத்திர அன்பர்களே!

அடுத்தவர்களை அனுசரித்துப் போய் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்கும் பரணி நட்சத்திர அன்பர்களே! இந்த புத்தாண்டில் சுபச்செலவு ஏற்படும். சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். பணவரவு நன்றாக இருக்கும். அடுத்தவர்கள் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும்.

பெரியோர்களின் உதவி கிடைக்கும். குருபகவானின் சஞ்சாரம் வழக்குகளில் சாதகமான போக்கைத் தரும். நண்பர்களிடம் கவனமாகப் பழகுவது நல்லது. தொழில், வியாபாரம் தொடர்பாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

உத்யோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப்போது வாக்குவாதங்கள் உண்டாகலாம்.

கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதைக் கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தியைத் தரும். உறவினர்களுடன் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது.

பெண்களுக்கு வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். மற்றவர்கள் பிரச்னை தீர பாடுபடுவீர்கள். காரியத் தடை, தாமதம் ஏற்படலாம். கலைத்துறையினருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். தாமதமாகி வந்த வாய்ப்புகள் திரும்பக் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு மந்தமாக காணப்படும். மேலிடத்தை அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். உயர்கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.

நன்மை: பணவரவு நன்றாக இருக்கும்.

எச்சரிக்கை: தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம்.

பரிகாரம்:


குலதெய்வத்தை வணங்கி வர பணவரவில் இருந்த தடைகள் நீங்கும். காரிய வெற்றி உண்டாகும்.

கார்த்திகை நட்சத்திர அன்பர்களே!

உங்களை விட உங்களைச் சுற்றி இருக்கும் மற்றவர்கள் பயன்படும் விதமாக திறமையைப் பயன்படுத்தும் கார்த்திகை நட்சத்திர அன்பர்களே!

இந்த புத்தாண்டில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சாதகமாக நடந்து முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். திடீர் மனத் தடுமாற்றம் உண்டாகலாம். குருவின் சஞ்சாரத்தால் பணவரவு திருப்தி தரும். சின்னச் சின்ன பிரச்னைகள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தொழில், வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து முடியும்.

குடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பெண்கள் எடுத்த காரியத்தை சாதகமாக செய்து முடிப்பீர்கள். திடீர் மனத் தடுமாற்றம் உண்டாகலாம். பெரியோர்கள் ஆலோசனை கை கொடுக்கும்.

கலைத்துறையினருக்கு அனைத்து வகையிலும் நன்மைகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் எந்த வேலையையும் எளிதாக செய்து விடுவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். கவனமாகப் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

நன்மை: முடங்கிக் கிடந்த பணிகள் வேகம் பெறும்.

எச்சரிக்கை: குடும்பத்தில் சிறு சலசலப்பு ஏற்படலாம்.

பரிகாரம்:


அருகிலிருக்கும் பெருமாளை வணங்கி வர காரிய அனுகூலம் உண்டாகும். மனக்குழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும்.

ரோகிணி நட்சத்திர அன்பர்களே!


சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படும் உயர்ந்த குணமுடைய ரோகிணி நட்சத்திர அன்பர்களே! இந்த புத்தாண்டில் எதையும் ஆராய்ந்து அதன் பிறகே அதில் ஈடுபடும் மனநிலை உண்டாகும். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். காரிய அனுகூலங்களும் உண்டாகும்.

மனோ தைரியம் அதிகரிக்கும். சூரியன் சுக்கிரன் இருவரின் சஞ்சாரத்தால் வீடு, வாகனங்கள் தொடர்பான செலவு ஏற்படும்.தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். லாபம் கூடும். பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளால் டென்ஷன் அடைவார்கள். எதிர்பார்த்தபடி சக ஊழியர்களால் உதவிகள் கிடைக்கும்.

குடும்பத்தில் சில்லறை சண்டைகளும், பூசல்களும் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகும். உறவினர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடிப்பது நல்லது. பெண்கள் எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் அதுபற்றி ஒருமுறைக்கு பலமுறை யோசித்தபின் ஈடுபடுவது நல்லது.

துணிச்சல் அதிகரிக்கும். கலைத்துறையினர் அனைத்து விதமான நிலை களிலும் நன்மைகளைப் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். மேலிடம் உங்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளும். மாணவர்களுக்கு தன்னம்பிக்கையுடன் பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சி மேற்கொள்வீர்கள்.

நன்மை: தொழில் எச்சரிக்கை உத்தியோகத்தில் உயர்வு உண்டு.

எச்சரிக்கை: வீடு எச்சரிக்கை வாகனம் தொடர்பான செலவு ஏற்படலாம்.

பரிகாரம்:


அம்மனுக்கு அரளிப்பூவால் அர்ச்சனை செய்து சிவனை வணங்க காரிய வெற்றி உண்டாகும்.
மிருகசீர்ஷ நட்சத்திர அன்பர்களே!

மனதில் இருக்கும் கவலைகளை வெளிக்காட்டாமல் சிரித்த முகத்துடன் அனைவரிடமும் பழகும் குணமுடைய மிருகசீர்ஷ நட்சத்திர அன்பர்களே!

இந்த புத்தாண்டில் காரியத் தடங்கல்கள் உண்டாகி நீங்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பயணங்கள் சாதகமான பலன்கள் தரும். மனக்கவலை நீங்கி தெளிவு உண்டாகும். எதிர்பாராத திருப்பங்களால் சிலரது வாழ்க்கைத் தரம் உயரும். நட்சத்ராதிபதி செவ்வாயின் சஞ்சாரத்தால் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நன்கு முடியும்.

புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் சிறக்க கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணிகளை சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டு பெறுவார்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சந்தோஷமான நிலை காணப்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை உண்டாகும்.

இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். கலைஞர்கள் தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம். அரசியல்வாதிகளுக்கு நல்ல பலன்கள் கிடைத்தாலும் அதே நேரத்தில் விழிப்புடன் செயல்படுவதும் நன்மைதரும். அடுத்தவர்களுக்கு ஆதரவாக செயல் படும் போது கவனம் தேவை. மாணவர்கள் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற நன்கு படிக்க வேண்டி இருக்கும். ஆசிரியர்கள் சக மாணவர்களின் ஆதரவும் கிடைக்கும்.

நன்மை: குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
எச்சரிக்கை: சுபச்செலவுகள் ஏற்படலாம்.

பரிகாரம்:


சஷ்டிதோறும் முருகப்பெருமானை வணங்கி வர குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். உத்தியோகம் நிலைக்கும்.

திருவாதிரை நட்சத்திர அன்பர்களே

எத்தனை தோல்வி ஏற்பட்டாலும் வெற்றி என்ற இலக்கை நோக்கி முன்னேறும் குணமுடைய திருவாதிரை நட்சத்திர அன்பர்களே இந்த புத்தாண்டில் நட்சத்ராதிபதி ராகுவின் சஞ்சாரத்தால் மனக்கவலை நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். பணவரத்து கூடும்.

காரியத் தடைகள் அகன்று எதிலும் திருப்தியான போக்கு காணப்படும். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கலாம். வெளியூர் பயணங்கள் மனதுக்கு சந்தோஷத்தைத் தருவதாக இருக்கும். சனி பகவானின் சஞ்சாரத்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உங்களது சிறப்பான செயல்கள் மற்றவர்களின் பாராட்டை பெற்றுத் தரும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாதூர்யமான பேச்சின் மூலம் முன்னேற்றம் காண்பார்கள்.

எதிர்பார்த்தபடி நிதிநிலை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும்.பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் டென்ஷன் உண்டாகலாம். கணவன் மனைவிக்கிடையே கோபத்தை விட்டுவிட்டு இதமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். பெண்கள் எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் காரிய தாமதம் உண்டாகும்.

பணப்புழக்கம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் சீரான நிலையில் இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள் பாடுபட வேண்டியிருந்தாலும் எதிர்காலம் மிகவும் நன்றாக இருக்கும். உங்களுக்கு பின்னால் உங்களை பற்றி புறம் பேசியவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள்.

மாணவர்களுக்கு உயர்கல்வி கற்க தேவையான பணவசதி கிடைக்கும். கூடுதலாக கவனம் செலுத்திப் படிப்பது வெற்றிக்கு உதவும்.

நன்மை: பாராட்டைப் பெறுவீர்கள்.

எச்சரிக்கை: கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

பரிகாரம்:

ராஜராஜேஸ்வரி தேவியை தீபம் ஏற்றி வணங்க செல்வம் சேரும். செல்வாக்கு உயரும்.

Facebook Follow

Name

2019 New Year Rasi Palan,7,latest,1,Nallur kovil,12,shirdi sai baba,1,ஆலய அறிவித்தல்கள்,2,ஆலயதரிசனம்,41,ஆன்மீகம்,119,இம்மாத பலன்,7,இவ்வார பலன்,1,ஏழரை சனி,1,குருபெயர்ச்சி பலன்கள்,17,சுக்ரன் பெயர்ச்சி பலன்கள்,1,விரதம்,3,வீடியோ,1,ஜோதிடம்,109,
ltr
item
Astrology Yarldeepam: 2019 புத்தாண்டு நட்சத்திர பலன்கள்: 6 நட்சத்திரக்காரர்களில் யாருக்கு அதிர்ஷ்டம்? எதில் எச்சரிக்கை?
2019 புத்தாண்டு நட்சத்திர பலன்கள்: 6 நட்சத்திரக்காரர்களில் யாருக்கு அதிர்ஷ்டம்? எதில் எச்சரிக்கை?
https://4.bp.blogspot.com/-MopXU6VnhOI/XBp1vSeWlcI/AAAAAAAAJ7E/vVotLVE4sgwP6IUvxRQA1OIwTE2IhjTYwCK4BGAYYCw/s640/newyear.jpg
https://4.bp.blogspot.com/-MopXU6VnhOI/XBp1vSeWlcI/AAAAAAAAJ7E/vVotLVE4sgwP6IUvxRQA1OIwTE2IhjTYwCK4BGAYYCw/s72-c/newyear.jpg
Astrology Yarldeepam
http://astrology.yarldeepam.com/2018/12/2019-6.html
http://astrology.yarldeepam.com/
http://astrology.yarldeepam.com/
http://astrology.yarldeepam.com/2018/12/2019-6.html
true
2040982477258416527
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy