
P மற்றும் R போன்ற எழுத்துக்களில் ஆரம்பிக்கும் பெயருடையவர்களைப் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
P மற்றும் R எழுத்தில் பெயருடையவர்களின் குணநலன்கள்
- பெரும்பாலும் இவர்கள் துலாம் ராசிக்காரர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு சூரியனின் ஆதிக்கம் நேரடியாக இருக்குமென்பதால் எப்போதும் நண்பர்கள் மற்றும் உறவுகள் சூழவே இருப்பார்கள்.
- எல்லாரும் தன்னிடம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பார்கள் சின்ன சின்ன தவறுகளுக்கு கூட அதிகம் வருந்துவர்.
- தங்களையும் தங்களைச் சுற்றியும் அழகாக வெளிப்படுத்த நிறைய மெனெக்கெடுவார்கள். கலை விஷயங்களில் இவர்களுக்கு ஆர்வம் அதிகமிருக்கும்.
- உடல் நிலையில் அடிக்கடி எதாவது பிரச்சனை வந்து கொண்டேயிருக்கும். சமூகத்துடன் எப்போதும் நெருக்கம் பாராட்டுவீர்கள்.
- சமூகத்தில் நடக்கிற விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மனக்கவலை கொள்வீர்கள். எந்த சின்ன விஷயத்திற்கு சட்டென உணர்சிவசப்படக்கூடியவராக இருப்பீர்கள்.
- எல்லாவற்றிலும் நேர்த்தியிருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பீர்கள். எல்லாமே கச்சிதமாக, சொன்ன நேரத்தில் சொன்ன வடிவத்தில் இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். சட்டென கோபம் கொள்வதால் அடிக்கடி மனஸ்தாபங்கள் நிகழும்.
- திருமண வாழ்க்கையில் அதீத இன்பம் வாய்க்காது. சண்டை சச்சரவுகளுடன் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கும். இயற்கை தொடர்பான விஷயங்களை அதிகம் நேசிப்பர். அதிக பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புவர்.
- வாக்குவாதங்களை தவிர்ப்பது இவர்களுக்கு நல்லது. அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள். ஒன்று, வாக்குவதாத்தின் அடிப்படையான சாதுர்யப் பேச்சு, மொழியறிவு இவர்களுக்கு சற்று குறைவு.
- அவ்வளவு எளிதாக தங்களுடைய தன்னம்பிக்கையை இழந்து விட மாட்டார்கள். தோற்கும் போதெல்லாம் இன்னும் ஒரு முறை முயற்சித்து பார்க்கலாமா என்பது தான் இவர்களது அடுத்த கேள்வியாக இருக்கும்.