
ஜோதிடத்தின் படி ஒருவரின் உடலில் எந்த பகுதியில் மச்சம் இருந்தால் செல்வம் கொட்டும் என்று ஜோதிடம் கூறுவதைப் பார்ப்போம்.
எந்த இடத்தில் மச்சம் இருத்தால் செல்வம் கொட்டும்?
- ஒருவரது வலது கன்னத்தில் மச்சம் இருந்தால், திருமணத்திற்கு பின் அவர் மிகுந்த செல்வந்தராக அதிக வாய்ப்புள்ளது என்று ஜோதிடம் கூறுகிறது.
- உதட்டிற்கு மேல் ஒருவருக்கு மச்சம் இருந்தால், அது அவர் எதிலும் வெற்றி அடைவதுடன், அவர்களிடம் செல்வம் கை நிறைய எப்போதும் இருக்குமாம்.
- மூக்கின் நுனி அல்லது மூக்கின் வலது பக்கத்தில் மச்சம் இருந்தால், அது அவர் கட்டாயம் ஒரு நாள் செல்வந்தராக ஆவதுடன், அவர்கள் 30 வயதிற்குள் வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்பு இருக்கும். ஆனால் அவை அனைத்தும் திருமணத்திற்கு பின் நடக்குமாம்.
- ஒருவருக்கு உள்ளங்காலில் மச்சம் இருந்தால், அவர்கள் பயணத்தை அதிகமாக விரும்புவதுடன், உலகம் முழுவதையும் சுற்றி பார்க்கும் வாய்ப்புகள் அவர்களிடம் இருக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது.
- இடுப்பு பகுதியில் மச்சம் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள். ஏனெனில் இவர்கள் பிறவிலேயே செல்வந்தராக இருப்பார்கள் என்று கூறுகிறது.
- ஒருவருக்கு நெற்றியின் மையப் பகுதியில் மச்சம் இருந்தால், அவர்கள் வாழ்வில் நிலைப்பெற்று இருப்பார்கள். மேலும் இவர்களிடம் போதுமான அளவு பணம் எந்நேரமும் இருக்குமாம்.
- வலது உள்ளங்கையில் மச்சம் இருப்பவர்கள், மிகுந்த செல்வத்துடன், எதிலும் வெற்றியைக் காண்பவர்களாக இருப்பர்கள். அதிலும் உள்ளங்கையின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால், அவர்கள் இளமையிலேயே செல்வந்தராக இருப்பார்கள். அதுவே உள்ளங்கையின் கீழ் பகுதியில் இருந்தால், அவர்கள் கஷ்டப்பட்டு போராடி வெற்றி மற்றும் செல்வத்தை பெறுவார்களாம்.
- தாடையில் மச்சம் இருப்பவர்கள், மிகுந்த அதிர்ஷ்டசாலிகள். ஏனெனில் இவர்கள் யாருடனும் அவ்வளவு எளிதில் ஒட்டமாட்டார்கள். தனிமையையே விரும்பும் இவர்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் மட்டும் நெருக்கமாக இருக்க விரும்புவார்களாம்.
- தொப்புளின் கீழே வலது பக்கத்தில் மச்சம் இருந்தால், அவர்கள் அதிக வெற்றியுடன் செல்வந்தவர்களாக வாழக் கூடியவர்கள் என்று ஜோதிடம் கூறுகிறது.
- மார்பு பகுதியின் வலது பக்கத்தில் மச்சம் இருந்தால், அது அவர்கள் அமைதியான வாழ்க்கையை வாழ்வதோடு, செல்வங்கள் மிக்கவர்களாக இருப்பார்களாம்.
- கன்னம் மற்றும் காது இணையும் பகுதியில், அதுவும் வலது பக்கத்தில் மச்சம் இருந்தால், அவர்கள் இளமையிலேயே செல்வந்தராக அதிக வாய்ப்புகள் உள்ளதாம்.