கிளிநொச்சி கிருஸ்ணர் ஆலயத்தில் முதல் முறையாக நரகாசூர சங்காரம் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.
தீபாவளித்திருநாளான இன்று பிற்பகல் கிருஸ்ணர் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.
அதனை தொடர்ந்து கலைநகர் சித்தங்கேணி கலைஞர்களின் குதிரையாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைகளுடன் நகர்வலம் வந்து நரகாசூர சங்காரம் நடைபெற்றுள்ளது.
இதேவேளை, முதல் முறையாக இடம்பெற்ற இந்நிகழ்வில் பெருந் தொகையான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.