உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். இன்று ஜோதிடப்படி 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
மேஷம்
வெளியூர் பயணங்களின் மூலம் மனம் மகிழ்ச்சி அடையும். நண்பர்களின் மூலம் தொழில் வாய்ப்புகள் பெருகும். வருமானம் அதிகரிக்கும். பெரியோர்களுடைய முழு ஆசிர்வாதமும் உங்களுக்குக் கிடைக்கும்.
ரிஷபம்
வீட்டில் பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் மூலம் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உண்டாகும். புதிதாகத் தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகளினால் வெற்றி கிடைக்கும்.
மிதுனம்
ஆன்மீகத்தில் உங்களுடைய ஈடுபாடு அதிகரிக்கும். அறிமுகம் இல்லாம புதிய நபர்களின் மூலம் உங்களுக்கு லாபம் உண்டாகும். பணியில் உள்ளவர்கள் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். பொது காரியங்களில் ஈடுபடுகிறவர்களுக்கு உதவிகள் செய்வீர்கள்.
கடகம்
தொழிலில் உங்களுக்கு முன்னோடியாகத் திகழும் பெரும்புள்ளிகளிள்அறிமுகம் கிடைக்கும். திருமணத்துக்கான மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வெற்றியில் சென்று முடியும். நீங்கள் பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளுக்கு உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
சிம்மம்
உங்களுடைய தேவைகள் அனைத்தும் நிறைவேற ஆரம்பிக்கும் அதிர்ஷ்ட நாள் இன்றிலிருந்து தான் உங்களுக்குத் துவங்குகிறது. ஆனாலும் நீங்கள் வெளியிடங்களில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க கொஞ்சம் கால தாமதமாகலாம். அதேபோல், வீட்டுக்கு புதிய நீ்ங்கள் எதிர்பாராத சொந்தங்கள் வந்து சேருவார்கள்.
கன்னி
இதுவரையில் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவு பிறக்கும். தடையாக இருந்து வந்த காரியங்கள் வெற்றிகரமான நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் செயல்படுவது அவசியம்.
துலாம்
வாகனப் பயணங்களில் நிதானம் அவசியம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உடன் பணிபுரிபவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதையோ வாக்குவாதம் செய்வதையோ தவிர்த்துவிடுங்கள். நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த தனவரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
விருச்சிகம்
மனதில் நினைத்த காரியம் நீங்கள் நினைத்ததைவிட சிறப்பாக நடந்து முடியும். தொழில் போட்டியை சமாளித்து வெற்றியை நோக்கி நகர, புதிய யுக்திகளையும் அணுகுமுறைகளையும் கையாளுவீர்கள். மாணவர்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். செய்யும் தொழிலில் நல்ல சூழலும் வாடிக்கையாளர்களும் அமைவார்கள்.
தனுசு
குடும்ப உறுப்பினர்களுடைய தேவைகளை அறிந்து அதை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். வெளிவட்டாரங்களில் உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் பொருளாதாரம் மேன்மை அடைய வாய்ப்புண்டு. வீடு, மனைகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.
கும்பம்
வாக்குறுதிகளைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்களின் வழியில் நடைபெறும் சுப காரியங்களுக்கு விரயச் செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். வாதத் திறமையால் பாராட்டப்படுவீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான சூழலும் லாபமும் உண்டாகும்.
மீனம்
சாதுர்யமான வாக்குத் திறமையால் லாபத்தை பெறுவீர்கள். பொருளாதார முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். அதன்மூலம் சில எதிர்காலத் திட்டங்களை வகுக்க ஐடியாக்கள் கிடைக்கும்.