ஒருவரின் ராசியை வைத்து அவர்களுக்கு எந்த நாள் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் என்பதை பற்றியும் ஜோதிடத்தின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய்க் கிழமை அதிர்ஷ்டமானது. இவர்கள் இந்நாளில் எந்த ஒரு செயலை செய்தாலும் வெற்றி கிடைக்கும். அதுவும் செவ்வாய் கிழமை இவர்களுக்கு தனது திறமையை மற்றவர்களிடம் வெளிபடுத்த மிகச்சிறந்த நாளாகும்.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு வெள்ளி, புதன், சனி மற்றும் திங்கள் ஆகிய கிழமைகள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இந்த ராசிக்காரர்கள் வெள்ளிக் கிழமைகளில் விரதம் இருப்பது மிகவும் நல்லது.
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு புதன் கிழமை மிகவும் அதிர்ஷ்டமான நாளாகும். இவர்கள் எந்த ஒரு புதிய செயலையும் புதன் கிழமைகளில் தொடங்கினால் நல்லது நடக்கும்.
கடகம்
கடகம் ராசிக்காரர்களுக்கு ஞாயிறு மற்றும் வெள்ளிக் கிழமைகள் இன்பம் மற்றும் மகிழ்ச்சியை அளிக்கும். திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் கிழமைகள் வெற்றியை கொடுக்கும்.
புதன் கிழமை பயணங்கள் மற்றும் முதலீடுகளுக்கு மிகவும் உகந்தது. இவர்கள் திங்கட் கிழமைகளில் விரதம் இருப்பது நல்லது.
சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்களுக்கு ஞாயிற்றுக் கிழமை மிகவும் சிறந்த நாள். இந்நாளில் எந்த ஒரு காரியத்தில் இறங்கினாலும் வெற்றி கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு புதன், வெள்ளி, திங்கள் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகள் அதிர்ஷ்டத்தை வழங்கும். ஆனால் இஅவ்ர்கள் செவ்வாய், சனி போன்ற கிழமைகளில் எந்த ஒரு முக்கியமான மற்றும் புதிய விடயத்தை தொடங்கக் கூடாது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு வெள்ளிக் கிழமை மிகவும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இந்த நாளில் எந்த விடயத்தை தொடங்கினாலும் அதிக புகழ் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஞாயிறு, திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகள் அதிர்ஷ்டமானது. இந்நாளில் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் வெற்றி கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு வியாழன் கிழமை அதிர்ஷ்டமானது. இந்நாளில் நீங்கள் நிறைவேற்ற வேண்டுமென்று நினைக்கும் காரியங்களை செய்தால் அனைத்தும் வெற்றியைத் தரும்.
மகரம்
மகரம் ராசிக்காரர்களுக்கு சனிக் கிழமை மிகவும் அதிர்ஷ்டமானது. இந்நாளில் இவர்கள் செய்ய நினைக்கும் செயல்களை மேற்கொண்டால், அவர் இதுவரை நினைத்திராத பலன் கிடைக்கும்.
கும்பம்
கும்பம் ராசிக்காரர்களுக்கு வியாழன், வெள்ளி, செவ்வாய் மற்றும் திங்கள் போன்ற கிழமைகள் அதிர்ஷ்டமான நாட்கள். ஆனால் புதன் மற்றும் சனி இவர்களுக்கு அதிர்ஷ்டத்தை தராது.
மீனம்
மீனம் ராசிக்காரர்களுக்கு வியாழன் கிழமை மிகவும் சிறப்பான நாள். இந்நாளில் உங்களது புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டால் வெற்றி கிடைக்கும்.