ஒன்பது எண்களில் 8ம் எண்ணிற்குத் தனிச்சிறப்பு உண்டு. எப்போதுமே அடுத்தவர்க்கு நல்லது மட்டுமே செய்பவர்கள்.
இவர்களது திறமையையும், புத்திசாலித் தனத்தையும் மற்றவர்கள் பயன்படுத்தி கொள்ளும் அளவிற்கு மிகவும் சிறந்து விளங்குவார்கள்.
குண நலன்கள்
எட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். தங்கள் கஷ்டங்களை பிறரிடம் சொல்லி உதவி கேட்க மாட்டார்கள்.
இவர்களும் தன்னால் முடிந்த உதவியை மட்டும் தான் பிறருக்கு செய்வார்கள். எதையும் எளிதில் கிரகித்து கொள்ளக்கூடிய ஆற்றல் இருக்கும்.
எப்போதும் கவலை தோய்ந்த முகத்துடன் ஆழ்ந்தை சிந்தனை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் பேச்சில் அழுத்தம் திருத்தமும், நிதானமும், உறுதியும் இருக்கும்.
எதிலும் பிரதிபலன் பாராது உழைத்திடும் இவர்கள் தெய்வத்தை கூட உழைப்பிற்கு அடுத்தபடியாகத்தான் நினைப்பார்கள். மற்றவர்களின் குணாதிசயங்களை கூர்ந்து கவனிப்பதிலும், அவர்களை எடை போடுவதிலும் மிகவும் திறமை சாலிகள்.
உடல் நலம்
எட்டாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு நடுத்தர உயரத்தை விட சற்றே குறைவான உயரம் இருக்கும். முட்டி எலும்புகள் எடுப்பான தோற்றம் அளித்து அழகாக இருக்கும். முகத்தில் எப்பொழுதும் கவலை குடிகொண்டிருக்கும்.
வயிற்று வலி, வயிற்றுப் புண், மலச்சிக்கல், வாயுத் தொல்லை போன்றவைகள் உண்டாகும். தோல் சம்மந்தமான வியாதிகளும் ஏற்படும். மார்புச் சளியும், இவர்களுக்கு தொல்லை கொடுக்கும்.
இல்லற வாழ்க்கை
எட்டாம் எண்ணில் பிறந்தவர்களின் குடும்ப வாழ்க்கை சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தின் மீது அதிக அக்கறை உடையவர்களாக இருப்பார்கள்.
கணவன், மனைவி இருவரும் எப்போதும் இணைபிரியாது ஒற்றுமையுடன் இருப்பார்கள். புத்திரர்களால் மிகச் சிறப்பான அனுகூலம் இருக்கும். உடன் பிறப்புகளை மிகவும் அனுசரித்து செல்பவர்களாக இருப்பார்கள்.
பொருளாதாரம்
எட்டாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு தேவைக்கேற்றபடி பணவசதியும் உண்டாகி கொண்டே இருக்கும். தாமே சுயமாக உழைத்து பூமி, வீடு, வாகனம் முதலியவற்றை அமைத்துக் கொள்வார்கள்.
சேமிப்பு என்பது இவர்களுக்கு குறைவாகவே இருக்கும். அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை மேல் அலாதி விருப்பம் உடையவராக இருப்பார்கள்.
தொழில்
எட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் மிக கடினமான வேலைகளையும் மிக எளிதில் செய்து முடிப்பார்கள். குறிப்பாக இரும்பு உருக்குதல், அச்சு வார்த்தல், பாத்திரங்கள் செய்தல், இயந்திரங்கள் செய்தல், இயந்திரங்கள் பழுது பார்க்கும் பணிகள் போன்றவைகள் இவர்களுக்கு ஏற்றது.
சிலருக்கு விவசாயப் பணி, நிலபுலன்கள், பெரிய காண்டிராக்டர்கள் போன்ற துறைகளும் முன்னேற்றம் கொடுக்கும். அடிமைத் தொழில்கள் சிலருக்கு அமைந்தாலும் படிப்படியாக முன்னேறி விடுவார்கள்.
நண்பர்கள்
எட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் எப்பொழுதும் கலகலப்பாக பேசி பிறரை சிரிக்க வைக்கக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள் என்றாலும் திடீரென்று கோபம் கொள்வார்கள்.
சனிக்குரிய காலம்
டிசம்பர் மாதம் 22ம் தேதி முதல் பிப்ரவரி 18 ம் தேதி வரையிலான காலம் சனிக்குரியது.
தெற்கு அல்லது தென் கிழக்கு சனிக்குரிய திசையாகும். எட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் இந்த திசைகளில் எந்த பணிகளைத் துவங்கினாலும் வெற்றி கிட்டும்.
சனிக்குரிய கல் நீலம். நிறத்தின் பெயராலேயே இக்கல் நீலம் என்றழைக்கப்படுகிறது. எட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் மட்டும்தான் நீல நிறக் கல்லை அணிய வேண்டும்.
பரிகாரம்
எட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் கலந்த நல்லெண்ணெயில் தீபமேற்றி நீலநிற சங்கு பூக்களால் அலங்கரித்து கருப்பு நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்வது நல்லது.
அதிர்ஷ்டம் தருபவை
அதிர்ஷ்ட தேதி - 8,17,26
அதிர்ஷ்ட நிறம் - கருப்பு, நீலம்.
அதிர்ஷ்ட திசை - தெற்கு
அதிர்ஷ்ட கிழமை - சனி, புதன்
அதிர்ஷ்ட கல் - நீலம்
அதிர்ஷ்ட தெய்வம் - ஐயப்பன்