இன்று எந்த எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் என்று பார்ப்போம்.
மேஷம்
தொழிலில் பல புதிய முயற்சிகளை மேற்கொள்ள சிந்திததுச் செயல்படுத்துவது நல்லது. பழைய கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வங்கிகளிடம் இருந்து நீங்கள் எதிர்பார்து்த கடன் உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். தாய்வழியிலான உறவுகளின் மூலம் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மனச்சோர்வுகள் நீங்கி, எதையும் சாதிக்கின்ற அளவுக்கு தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.
ரிஷபம்
தொழில் பங்குதாரர்களும் உங்களுடைய நண்பர்களும் உங்களுக்கு உறுதுணையபக இருப்பார்கள். பிறருக்குக் கடன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. உயர் அதிகாரிகளுடைய ஆதரவும் வழிகாட்டுதலும் உங்களுக்குச் சாதகமான பலன்கள் உண்டாகும். சில நேரங்களில் அவ்வப்போது மன வருத்தத்துக்கு ஆளாக நேரிடும். பயணங்களினால் நன்மையே ஏற்படும். எதிலும் கொஞ்சம் கூடுதல் பொறுப்புடனும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.
மிதுனம்
வழக்கமான உங்களுடைய வருமானத்தை விடவும் இன்று கூடுதல் வருமானம் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய முழு திறமைகளையும் வெளிப்படுத்தி, வெளியாட்களிடம் நிறைய பாராட்டுக்களைப் பெறுவீர்கள். மனதுக்குள் புதுப்புது எண்ணங்கள் தோன்றி மறையும். பெரியோர்களுடைய ஆதரவும் ஆலோசனைகளும் உங்களுக்குக் கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்து வந்த இழுபறி நிலைக்ள நீங்கி, சுபிட்சம் பெருக ஆரம்பிக்கும். வீட்டில் ஆடை, ஆபரணங்களை வாங்கி, மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.
கடகம்
வீட்டில் உள்ள பெரியோர்களிடம் உங்களுடைய மதிப்புகள் உயரும். மனதுக்குள் உற்சாகங்கள் பிறக்கும். தொழில் சம்பந்தமான உங்களுடைய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். விளையாட்டில் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உண்டாகும். மன தைரியம் அதிகரிக்கும். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் நாளாக இன்று இருக்கும். தாய் பற்றிய வீண் கவலைகள் தோன்றி மறையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.
சிம்மம்
வியாபாரங்கள் தொடர்புடைய காரியங்களை யோசித்து, செயல்படுத்துவது உங்களுக்கு அதரவான நல்ல பலன்களைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திருப்திகரமான அளவுக்கு பண வரவுகள் கைக்கு வந்து சேரும்.குடும்பத்தில் தேவையில்லாத வீண் குழப்பங்கள் உண்டாகும். மனதுக்குள் புதுவிதமான உற்சாகமும் தைரியமும் பிறக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.
கன்னி
உங்களுடைய சாதுர்யமான பேச்சுத் திறமையினால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். உங்களுடைய வாழ்க்கைத் துணையுடன் உண்டாகும் தேவையில்லாத வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான நிலை காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் குறைய ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.
துலாம்
தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகள் குறைய ஆரம்பிக்கும். எடுக்கும் முயற்சிகள் உங்களுக்குச் சாதகமான பலன்களைத் தரும். பணவரவு மேம்படும். மனதுக்குள் இருந்து வந்த இன்னல்கள் நீங்கி, மன அமைதி கிடைக்கும். சுயதொழில் தொடர்புடைய பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களுடைய அறிமுகமும் உதவியும் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.
விருச்சிகம்
இதுவரையிலும் தடைபட்டு காரியங்களைச் செய்து முடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த ஆதரவான சூழலுமு் வாய்ப்புகளும் அதிகரிக்கும். கணவன் மற்றும் மனைவிக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். தொழில் நிமித்தமான முடிவுகளில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெ்ளளை நிறமும் இருக்கும்.
தனுசு
நீங்கள் திட்டமிட்ட பணிகளை ஒருமுறைக்கு பலமுறை யோசித்துச் செய்வது உங்களுக்கு வெற்றியைத் தரும். குடும்பத்தில் இருநு்து வந்த பிரச்சினைகள் குறைய ஆரம்பிக்கும். குழந்தைகளுடைய ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் தேவை. சிக்கலான சில விஷயங்களைச் சாதுர்யமாகப் பேசி முடிவு காண்பீர்கள். வீண் பயத்தைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரம் தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.
மகரம்
நிறைத்த செயலில் நினைத்தபடி வெற்றி உண்டாகும். நீங்கள் பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் மூலம் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உங்களுடைய உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்பு இருந்ததைக் காட்டிலும் முன்னேற்றமான சூழல்களே உருவாகும். உங்களுடைய சாமர்த்தியமான பேச்சுத் திறன்மூலம் எல்லாவற்றையும் திறம்படச் செய்து முடித்து பாராட்டுக்களைப் பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.
கும்பம்
தேவையற்ற வீண் பேச்சுக்களைக் குறைப்பதன் மூலமாக குடும்பத்தில் அமைதி நிலை உண்டாகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும். கோபத்தைக் குறைத்து கொஞ்சம் அமைதியாகச் செயல்படுவது நல்லது. உத்தியோகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடலாம். மற்றவர்குளுடைய பிரச்சினைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.
மீனம்
வீட்டில் பிள்ளைகள் தொடர்பான மனக்கவலைகள் தோன்றி மறையும். புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பாக வீண் அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிலும் நிதானமாகச் செயல்படுவதும், மற்றவர்களை அனுசரித்துச் செல்வதும் நல்லது. எந்த காரியத்தையும் கூடுதல் கவனத்துடன் செய்வது சிறந்தது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்