சிலர் எவ்வளவு தான் கடினமாக உழைத்தாலும், வீட்டில் பணப்பிரச்சனை எப்போதும் இருந்து கொண்டே உள்ளதா அப்படியெனில் உங்கள் வீட்டில் வாஸ்து தோஷம் உள்ளது என்று அர்த்தம்.

மேலும் இந்த தோஷத்தைப் போக்க, வீட்டில் ஒருசில மாற்றங்களை உடனே செய்ய வேண்டியது அவசியம்.
வீட்டில் உள்ள பணப்பிரச்சனையைப் போக்க அவசியம் செய்ய வேண்டியவைகள் என்னவென்று பார்ப்போம்.
படுக்கை அறை சுவர்கள்
வாஸ்துவின் படி, வீட்டிலேயே படுக்கை அறையில் தான் அதிர்ஷ்டமும், செல்வமும் அதிகரிக்கும். எனவே படுக்கை அறையின் சுவர்களில் விரிசல் சற்றும் தாமதிக்காமல் உடனே சரிசெய்யுங்கள்.
சரியான திசை
பணத்தை சேமித்து வைக்கும் அலமாரி, பீரோ போன்றவற்றை வீட்டின் தெற்கு திசையில் வைத்து, அதன் முகம் வடக்கு திசையை நோக்கியவாறு வையுங்கள், இது வீட்டில் பணத்தை நிலைத்திருக்கச் செய்யும்.
பூஜை அறை
வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறையானது வடகிழக்கு திசையில் இருக்க வேண்டும். மேலும் பூஜை அறையில் மஞ்சள் மற்றும் வெள்ளை நிற பல்பைப் பயன்படுத்த வேண்டும்.
ஒழுகும் குழாய்
வீட்டில் உள்ள குழாய்களில் எப்போதும் தண்ணீர் வடிந்தவாறு இருந்தால் அதை உடனே சரிசெய்யுங்கள். இல்லாவிட்டால் நீர் வீணாவது போன்றே, பணமும் நிலைக்காமல் வீணாய் செலவாகும்.
சங்கு
வீட்டில் பணப்பிரச்சனை அதிகம் இருந்தால், பூஜை அறையில் சங்கு/கிளிஞ்சல்களை வையுங்கள். கடலில் இருந்து கிடைக்கும் சங்கு லஷ்மி தேவியுடன் தொடர்புடையதால், இதனை வீட்டினுள் வைத்திருப்பதால், செல்வம் அதிகரிக்கும்.
உடைந்த மரப் பொருட்கள்
வீட்டில் கட்டிலின் கால்கள் உடைந்திருந்தாலோ, அலமாரிகள் மற்றும் இதர மரப் பொருட்கள் சேதமடைந்திருந்தாலோ அது வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஈர்த்து, பணக் கஷ்டத்தை அதிகரிக்கும். எனவே இம்மாதிரியான பொருட்களை உடனே தூக்கி எறிந்துவிடுங்கள்.