திரெளபதை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற திகில்! வீடியோ

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் :


அம்பாறை கல்முனை, பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் இன்றைய தினம் மிகவும் பக்திபூர்வமான முறையில் தீ மிதிப்பு உற்சவம் இடம்பெற்றுள்ளது.

கிழக்கிலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்றதும், தொன்மையானதுமான குறித்த ஆலயத்தை நோக்கி இலங்கையில் பல பாகங்களிலும் இருந்து பக்தர்கள் படையெடுத்து வரும் நிலையில், இன்றைய தீ மிதிப்பு வைபவத்தில் பெருமளவிலானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இங்கு மிகவும் உணர்வெழுச்சியுடன் பக்தர்கள் தீயில் இறங்கிய காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும் திகில் காட்சியாக காணப்பட்டுள்ளது.


கிழக்கில் பல்வேறு சக்தி ஆலயங்கள் அமையப்பெற்றாலும் அதில் மிகத் தொன்மையான ஆலயங்கள் சிலதே அமைந்துள்ளன.

கல்முனை நகரில் இருந்து வடக்கே 3 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது ப​ழைமை வாய்ந்த பாண்டிருப்பு கிராமம். இங்குதான் ப​ழைமையின் பெருமை கூறும் ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

திரௌபதை அம்மனை வருந்தி அழைத்து கும்பிட்டு மன்றாடி வந்தனை செய்து வழிபடுகின்ற மரபும் பாண்டவர் வேடம் பூண்டு நிற்கின்றவர்களுக்குமே இங்கு விசேட பூசை வழிபாடுகள் நடைபெறுகின்றன. மனிதனை தெய்வமாக பூஜிக்கும் மகாசக்தி ஆலயமாகவும் பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலயம் விளங்குகின்றது.

மகாபாரதக் கதையினை மையமாக வைத்து 18 தினங்கள் பாண்டிருப்பு திரௌபதியம்மன் ஆலய உற்சவங்கள் நடைபெறுகின்றன. இலங்கையில் முதன்முதலில் திரௌபதி அம்மனுக்கென ஆலயம் அமையப் பெற்றது பாண்டிருப்பிலேயாகும்.

வட இந்தியாவில் இருந்து தாதன்மா முனியும் அவரது ஆட்களும் இந்தியாவின் கொங்குநகரில் இருந்து கப்பலேறி புறப்பட்டு கிழக்கு கரையை வந்தடைந்தனர். மட்டக்களப்பு பகுதியிலிருந்து புறப்பட்ட தாதன்மா முனிவன் அந்நாளில் நாகர்முனை என அழைக்கப்பட்ட திருக்கோவிலைச் சென்றடைந்து அங்கு தங்கியிருந்து மகாபாரதக் கதையினை மக்கள் மத்தியில் பரப்பிவரலானார்.

இந்தியாவிலிருந்து தாதன் என்பவன் இங்கு வந்திருப்பதனை அறிந்து கொண்ட மட்டக்களப்பு பகுதிக்கு சிற்றரசனாக இருந்த மாருதசேனனுடைய புத்திரன் எதிர்மன்னசிங்கன் (கி.பி.1539-_கி.பி. 1583வரை) தாதனைக் கண்டு அவனது நோக்கம் வருகை பற்றி விசாரித்து அறிந்து கொண்டான். தமது வழிபாட்டிற்கு உகந்த இடம் ஒன்றைத் தேடி வழங்குமாறு தாதன் கேட்டுக்கொண்டான்.

எதிர்மன்னசிங்கனும் தாதனின் விருப்பப்படி அவனையும் அழைத்துக் கொண்டு மீண்டும் கடல் வழிப்பயணம் செய்த போது அருகே கடலும் ஆலவிருட்சங்களும் கொக்கட்டி மரங்களும் நாவல் மரங்களும் மேற்கே அடர்ந்த வனப்பகுதியும் காணப்பட்ட பாண்டிருப்பைக் கண்டு இறங்கி அங்கேயே தங்கிதான் கையோடு கொண்டு வந்திருந்த விஷ்ணு, திரௌபதி, பாண்டவர் சிலைகளை வைத்து கொக்கட்டி மரத்தடியில் கொத்துப் பந்தலிட்டு வழிபாடு நடத்தி வந்தான். மன்னனும் தாதனின் வழிபாட்டிற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கினான்.

இதேவேளை திரௌபதிஅம்மனின் மகிமையை அறிந்து கொண்ட கண்டி மாநகரை ஆட்சி புரிந்த மன்னன் விமலதர்மசூரியன் (கி.பி.1594_கிபி 1604) இங்கு வந்து அம்மனை தரிசித்து விட்டு பொன், வெள்ளி பொருள் கொடுத்து சென்றதாக கல்வெட்டுக்களில் இருந்து அறியக் கிடக்கின்றது.

ஆரம்பத்தில் தாதன் ஆலயம் என அழைக்கப்பட்ட இவ்வாலயம் பின்பு பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலயம் என பேர் பெற்றது. ஆலயத்தின் பிரசாதமான மருத்துவ மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் வாசனைமிக்க ‘பாண்டாரப் பொட்டு’ அற்புதம் மிக்கதும் பிணிதீர்க்கும் அருமருந்தாகவும் காணப்படுகின்றது.

இலங்கையில் மிக நீண்ட தீக்குழியைக் கொண்ட ஆலயமாக பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு பெண்கள் தீமிதிப்பில் ஈடுபட முடியாது. ஆலய உற்சவ காலங்களில் பாண்டவர்கள், திரௌபதி, கண்ணன், தேவாதிகள் என ஆலயத்தில் கட்டுக்கு நிற்பவர்கள் எக்காரணம் கொண்டும் தங்களது வீடுகளுக்குச் செல்ல முடியாது.

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்தின் உற்சவங்கள் யாவும் மகாபாரத கதையினை அடியொற்றியதாகவே இடம்பெறுகின்றன. மகாபாரதத்தில் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையில் நடைபெற்ற போரில் பாண்டவர்கள் சந்தித்த சத்திய சோதனைப் பயணங்களை எடுத்துக்காட்டும் வகையிலே திரௌபதை அம்மன் வழிபாடு அமைந்துள்ளது.

இதில் முக்கிய திருவிழாவாக பாண்டவர்கள் வனவாசம் செல்லல், அருச்சுனன் தவநிலை செல்லல், பாண்டவர்கள் திரௌபதை சகிதம் தீப்பாய்தல் ஆகிய நிகழ்வுகள் உற்சவ காலத்தின் இறுதி மூன்று தினங்களும் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன. இக்காலப்பகுதியில் நாட்டின் நாலாபாகங்களிலிருந்தும் பக்தர்கள் பாண்டிருப்புக்கு படையெடுப்பார்கள். பாண்டிருப்பு மட்டுமல்ல கல்முனை பிரதேசமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.

ஆலய உற்சவம் இங்குள்ள குடிகள் மற்றும் சாகியங்களின் பங்களிப்புடன் 18 தினங்கள் முறைப்படி நடத்தப்படுகின்றது. இதன் படி 11 குடிகள் 04 சாகியங்களும் பூசை செய்கின்றனர்.

ஆலயத்திற்கென மரபு வழிவந்த ஆலய நிர்வாகத்தினர், பாண்டவர்கள், பூசகர்கள் என தமது குலமரபுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கிணங்க ஊரில் பூசகர் தத்தி, தருமர் தத்தி, வீமர் தத்தி, அருச்சுனர் தத்தி, நகுலன் தத்தி, சகாதேவன் தத்தி என மகாபாரத கதையை அடியொற்றியதாக வகுக்கப்பட்டுள்ளன.

பாண்டிருப்பில் இன்று கூட திரௌபதை அம்மன் ஆலயத்தின் வழிபாட்டு முறைகளை எடுத்தியம்பக் கூடிய வகையில் மக்கள் மத்தியில் சில காரணப்பெயர்களும் வைக்கப்பட்டுள்ளன. வீமர் வீதி, அருச்சுனர் வீதி, வாள் மாற்றும் சந்தி, கல்யாணக்கால் வெட்டும் இடம், மஞ்சள் குளிக்கும் இடம் போன்றவை மகாபாரத மரபினை அடியொற்றியதாகவே காணப்படுகின்றன.

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்தில் மூட்டப்படும் தீயின் வேள்வியினால் இக்கிராமத்தின் கீர்த்தி அகில உலகளவில் பரவி நிற்கின்றது. எந்தவொரு இந்து ஆலயத்திலும் இல்லாத பெருமை இங்குள்ள தீக்குழிக்குள்ளது. 21 அடி நீளமும் 3 அடி ஆழமும் 4 அடி அகலமும் கொண்ட தீக்குழியாக அன்னை திரௌபதை அம்மன் ஆலய தீக்குழி அமைந்துள்ளது. இத் தீயின் வேள்வியினாலே ‘தீப்பள்ளயம்’ என அழைக்கப்படலாயிற்று.

அற்புதமும், மகிமையும், பழைமையும், புதுமையும் நிறைந்த மகாசக்தி ஆலயமாக பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயம் திகழ்கின்றது ஆலயம் கடந்த 2016 இல் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் கம்பீரமாக காட்சியளிக்கின்றது.

Name

2019 New Year Rasi Palan,7,2019 Tamil New year Rasi Palan,2,latest,1,Nallur kovil,12,shirdi sai baba,1,ஆலய அறிவித்தல்கள்,2,ஆலயதரிசனம்,41,ஆன்மீகம்,132,இம்மாத பலன்,8,இவ்வார பலன்,2,ஏழரை சனி,1,குரு பெயர்ச்சி பலன்கள் 2019,1,குருபெயர்ச்சி பலன்கள்,17,சுக்ரன் பெயர்ச்சி பலன்கள்,2,விரதம்,3,வீடியோ,1,ஜோதிடம்,138,
ltr
item
Astrology Yarldeepam: திரெளபதை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற திகில்! வீடியோ
திரெளபதை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற திகில்! வீடியோ
https://2.bp.blogspot.com/-pGBc3X3nPYs/W6WhVUtl2VI/AAAAAAAAIDA/PuHxXUwV7x8Hd2cG4rRGOYGsd0Sqfov9ACK4BGAYYCw/s640/download.jpg
https://2.bp.blogspot.com/-pGBc3X3nPYs/W6WhVUtl2VI/AAAAAAAAIDA/PuHxXUwV7x8Hd2cG4rRGOYGsd0Sqfov9ACK4BGAYYCw/s72-c/download.jpg
Astrology Yarldeepam
http://astrology.yarldeepam.com/2018/09/blog-post_22.html
http://astrology.yarldeepam.com/
http://astrology.yarldeepam.com/
http://astrology.yarldeepam.com/2018/09/blog-post_22.html
true
2040982477258416527
UTF-8
அனைத்து பதிவுகளையும் பார்க்க Not found any posts அனைத்தையும் பார்க்க மேலும் படிக்க Reply Cancel reply Delete By முகப்பு PAGES POSTS அனைத்தையும் பார்க்க உங்களுக்கான பரிந்துரைகள் செய்தி பிரிவுகள் ARCHIVE தேடுக அனைத்து பதிவுகள் நீங்கள் தேடியது எங்களிடம் இருக்கும் பதிவுகளுடன் பொருந்தவில்லை Back Home ஞாயிற்றுக்கிழமை திங்கட்கிழமை செவ்வாய்க்கிழமை புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை சனிக்கிழமை ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன வெள்ளி சனி January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 நிமிடத்திற்கு முன்னர் $$1$$ minutes ago 1 மணிநேரத்திற்கு முன்னர் $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy