
குரு பகவான் இருக்கும் இடத்தின் பலத்தினை விடப் பார்க்கும் இடத்தின் பலமே அதிகம். எனவே, குருவின் பார்வை பெறும் ராசிகள் பூரண பலன்கள் பெறுவர்.
மேலும் 2018-2019-ம் ஆண்டிற்கான குருப்பெயர்ச்சி பலன்களில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார் என்பதைப் பற்றி பார்ப்போம்.
- குருபெயர்ச்சி
- மங்களகரமான விளம்பி வருடம் 04.10.2018 வியாழக்கிழமை அன்று, அதாவது புரட்டாசி மாதமான இந்த மாதத்தில் வரும் 18-ம் நாளான, தசமியில் சனிபகவான் நட்சத்திரமான பூசம் நட்சத்திரத்தில், சரியாக 10.07-க்கு, துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு இடம் பெயர்கிறார்.
- துலாம் ராசியில் இருந்து, விருச்சிக ராசிக்கு அதாவது, விசாகம் 4-ம் பாதத்தில், குருபகவான் தனது சொந்த நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- திருக்கணித பஞ்சாங்கத்தின்படி வரும் 2018 அக்டோபர் மாதம் 11-ம் தேதி வியாழக்கிழமை 4:49-க்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு குருபகவான் இடப்பெயர்ச்சி ஆகிறார்.
- மேலும், 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 4-ம் தேதி 2:39 மணி வரை குருபகவான் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார்.
- குருபகவான் நம் சரீரத்தில் மூளை பகுதியில் அமர்ந்திருக்கிறார். மேலும் இவர் நமக்கு சிந்திக்கும் ஆற்றலையும் பூர்வ ஜென்ம நியாபகங்களை அளிப்பவர்.
வேறு எந்த ராசியை குரு பார்கிறார் தெரியுமா?
- விருச்சிக ராசிக்கு வரும் குரு பகவான் தொடர்ந்து ஒரு வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார்.
- விருச்சிக ராசிக்கு வரும் குரு பகவான் அடுத்த விகாரி வருடம் அக்டோபர் மாதம் 29-ம் தேதி தனுசு ராசிக்கு மாறுகிறார்.
- விருச்சிக ராசியில் இருந்து தனது ஐந்தாம் பார்வையால் மீன ராசியையும் ஏழாம் பார்வையால் ரிஷப ராசியையும் ஒன்பதாம் பார்வையால் கடக ராசியையும் பார்க்கிறார்.