ஒரு வீட்டில் நான்கு பேர் என்றால் 4 பேருக்கும் வெவ்வேறு திசையும், தசாபுத்தியும் நடக்கும். ஜாதகத்துக்கு ஏற்ப திசையும், தசாபுத்தியும் மாறுபடும்.

எந்த திசை நடப்பதாக இருந்தாலும், அவரவர் ஜாதகப்படி நன்மை, தீமை இரண்டுமே கலந்தே இருக்கும்.
அந்தவகையில், நமக்கு தற்போது எந்த திசை நடைபெறுகிறது. அது நன்மையா? தீமையா? என்பதை ஜாதகப்படி தெரிந்து கொள்ளுவோம்.

எந்த திசை நடப்பதாக இருந்தாலும், அவரவர் ஜாதகப்படி நன்மை, தீமை இரண்டுமே கலந்தே இருக்கும்.
அந்தவகையில், நமக்கு தற்போது எந்த திசை நடைபெறுகிறது. அது நன்மையா? தீமையா? என்பதை ஜாதகப்படி தெரிந்து கொள்ளுவோம்.
- சூரிய திசை – தொடர்ந்து சிவபெருமானை வழிபட்டு வந்தால் பிணிகள் நீங்கும்.
- சந்திர திசை – லோக நாயகியான அம்பிகையை வழிபாடு செய்தால் நன்மை உண்டாகும்.
- செவ்வாய் திசை – முருகப்பெருமானை வழிபட்டால் முன்னேற்றம் அடையலாம்.
- புதன் திசை – மஹாவிஷ்ணுவை வழிபாடு செய்ய வேண்டும். தொடர்ந்து வழிபட விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
- வியாழன் திசை – தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்ய வாழ்வில் பல நல்ல திருப்பங்களை காணலாம்.
- சுக்ர திசை – சக்தி, அபிராமி வழிபாடு செய்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.
- சனி திசை – அனுமனை வழிபடுவதால் தடைகள் அனைத்தும் அகலும்.
- ராகு திசை – துர்க்கையை வழிபட மனகஷ்டங்கள் அனைத்தும் நீங்கும்.
- கேது திசை – விநாயக பெருமானை வழிபட்டு வர தடைகள் அகலும்.