மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்று நெருப்பு ராசிகள்.
ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்றும் நில ராசிகள்.
மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்றும் காற்று ராசிகள்.
கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய மூன்றும் நீர் ராசிகள்.
நீரும், நெருப்பும் இணையாது, இதைப் போன்று நிலத்தோடு காற்றும் இணையாது.
நெருப்போடு காற்றும், நிலத்தோடு நீரும் இணையும், ஆகவே இணையாக உள்ள ராசிக்காரர்களை இணைத்தால் மட்டுமே இல்லறம் நல்லறமாக இருக்கும்.
நெருப்பு ராசிக்காரர்கள் எளிதில் கோபப்படுபவர்களாகவும், நில ராசிக்காரர்கள் பொறுமைசாலிகளாகவும், காற்று ராசிக்காரர்கள் அலைபாயும் மனதினை உடையவர்களாகவும், நீர் ராசிக்காரர்கள் எளிதில் இளகுகின்ற மனதினைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
நில ராசிக்காரர்கள்
ரிஷபத்தை ஸ்திர நிலம் என்றும், கன்னியை உபய நிலம் என்றும், மகரத்தை சர நிலம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
இவர்கள் எதையும் எளிதில் நம்பும் சுபாவம் கொண்டவர்கள், சாதுவான தோற்றம் உடையவர்கள்.
விட்டுக்கொடுக்கும் அன்பு நிறைந்த மனத்துடன், ஒழுக்கத்துடன், பாசமாக நல்வழியில் செயல்படுபவர்கள்.
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதற்கு ஏற்ப, உச்சகட்ட கோபத்தையும் காட்டுவார்கள்.
புதன்- சுக்கிரன்- சனி என மூன்று அதிபதிகள் இருந்தாலும், சனி தான் பிரதான அதிபதியாக இருப்பார்.
தினமும் ஒரு காவல் தெய்வத்தை வணங்கு வருவது நல்லது, வேறு பரிகாரங்கள் ஏதும் தேவையில்லை.