இந்த ராசிக்காரர்கள் இந்த விடயத்தில் மிகவும் உஷாராகவே இருப்பார்களாம்….. நீங்களும் அப்படியா….?

SHARE:

12 ராசிகளில் ஒவ்வொரு ராசிக்காரர்களும் சில தனித்தன்மையுடன் விளங்குவார்கள். அது அவர்களின் ராசிப்படி கணிக்கப்படுகிறது.

12 ராசிகாரர்கள் எந்தந்த விடயங்களில் உஷாராக இருப்பார்கள் எனப் பார்க்கலாம்.


மேஷம்
வெற்றி பெறுவது ஒன்றையே லட்சியமாக கொண்டிருப்பவர்கள். இவர்கள் அவசரக்காரர்கள் என்பது நூற்றுக்கு நூறு உண்மையான ஒன்று.

இவர்கள் நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்யாவிட்டால் தூக்கம் வராது. மூக்கிற்கு மேல் கோபம் தான் வரும். தந்திரசாலிகள் மட்டுமல்ல, தைரியசாலிகளும் கூட இவர்கள்.

ரிஷபம்
தோற்றத்தால் மற்றவர்களின் எண்ணங்களை மாற்றம் காணச் செய்யும் ரிஷப ராசிக்காரா்கள் சீற்றம் இல்லாமல் பேசும் தன்மை பெற்றவர். கூட்டங்களுக்கு மத்தியில் இவர்கள் நிற்கும் பொழுது இவர்களை கோட்டீஸ்வரர் என்றே மதிக்கும் அளவிற்கு தோற்றப் பொழிவு இருக்கும். எடுக்கும் முயற்சியில் பின் வாங்கமாட்டார்கள்.

உறவினர்களைவிட நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். எல்லாம் விதிப்படி நடக்கிறது என்று சொல்வார்கள்.

மிதுனம்
அதிக புத்திசாலித்தனத்தையும், மிகச்சிறந்த நிர்வாகம் தன்மையும் உடையவர்கள். புதுமை செய்வதிலும் புரட்சி செய்வதிலும் புகழ் கொடி நாட்டும் இவர்கள் மிகப்பெரிய காரியங்களைக்கூட மிக எளிதாகச் செய்து முடிப்பார்கள்.

இவர்களிடம் காரியம் சாதித்துக் கொள்ள வேண்டுமானால், இவர்களைப் போற்றி புகழ்ந்து பேசினாலே போதும்.

கடகம்
வைராக்கிய மனம் பெற்ற இவர்கள் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டார்கள். பொது நலத்தில் ஈடுபாடு கொண்ட இவர்களை மக்கள் போற்றி கொண்டாடுவார்கள். வயது கூட கூட இவர்கள் வாழ்க்கை வளம் பெருகும்.

வாழ்வில் மிக வேகமாக முன்னேற வேண்டும் என்ற ஆவலில் மின்னல் வேகத்தில் செயல்படுவார்கள். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த குணங்களை பெற்றவர் இவர்கள்.

சிம்மம்
எவருக்கும் அடங்காத தன்மையும், அடக்க வேண்டும் என்கிற சர்வதிகார போக்கும் உடையவர்கள். சீறும் குணத்தை பெற்றிருந்தாலும் மக்களைச் சீர்தூக்கி எடைபோடும் ஆற்றலும் அதனை செயல்படுத்தும், விதமும் அருமை.

நிர்வாகத் திறமையினால் எண்ணற்ற நெஞ்சங்களின் மனதில் இடம் பிடித்து, கொடுத்து உதவும் தன்மை கொண்ட இவர்கள் கோபம் கொள்வதற்கும் தயங்கமாட்டார்கள்.

கன்னி
பாராட்டுதல்களைக் காட்டிலும் பாசத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்கள் புதுமையாகவும், புத்தி சாலித்தனமாகவும் பதில் கூறும் ஆற்றல் பெற்றவர்கள்.

இவர்களுக்கு ஆத்ம பலத்தை விட அறிவு பலம் அதிகம். பார்த்த மாத்திரத்தில் இவர்களைப் புரிந்து கொள்வது என்பது அரிது. ஏனென்றால் அமைதி இவர்கள் முகத்தில் இருக்கும்.

வாழ்க்கை ரகசியங்களையும் மனதிலேயே வைத்துக் கொள்வார்கள். இவர்கள் புத்திசாலித்தனத்திற்கும் வாழ்வில் நடுப்பங்கில் புகழ் கூடும். மதிப்பும் மரியாதையும் உயரும். கன்னியர்களை தேர்ந்தெடுத்து மணம் முடிக்கும் போது கவனமாகப் பொருத்தம் பார்த்து செய்தால் புகழோடும், பொருளோடும் வாழ இயலும்.

துலாம்
மற்றவர்களை எடை போடுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். வசீகர பார்வையும் கவர்ச்சியான முகத்தோற்றமும் பெற்ற இவர்கள் சமூகத்தில் தனி அந்தஸ்து பெற்று விளங்குபவர்கள். மற்றவர்கள் தொடங்கும் புதுத் தொழிலுக்கு கைராசி மிக்கவர்கள் இவர்கள் என்ற முறையில் குத்துவிளக்கு ஏற்றவும் புது கணக்கு போடவும் இவர்களை அழைப்பர்.

இவர்கள் தொழிலுக்கு இவர்களே புதுகணக்கு போட்டால் உயர்வான லாபம் ஏற்படும். மனைவி மக்கள் பேரில் இவர்கள் தொழில் செய்யும்போது மகத்தான பலன்களைக் காண்பார்கள்.

விருச்சிகம்
கற்பனை வளத்தாலும் காரியங்களை எளிதில் முடிக்கும் திறத்தாலும் மக்களைக் கவர்ந்திருப்பார்கள். தவறு செய்தவர்கள் எந்த உயர்ந்த நிலையில் இருந்தாலும் தட்டி கேட்க தயங்க மாட்டார்கள்.

பத்திரிக்கை, ஆன்மீகம், கலைத்துறை. ஜோதிடம், எழுத்து, விஞ்ஞானம் போன்ற துறைகளெல்லாம் இவர்களுக்கு பொருத்தமான துறைகளாகும்.

தனுசு
அன்பு, பொறுமை, பக்தி, நாணயம், அனைத்தும் இவர்கள் கவரிமான் பரம்பரை என்று தான் சொல்ல வேண்டும். வீரமும், விவேகமும் கொண்டு செயல்படுவதோடு உறுதியோடு நின்று இறுதிவரை போராடுவார்கள்.

வெளியில் சுதந்திர பறவைகளாகத் திரியும் இவர்களுக்கு வீட்டில் ஏதாவது ஒரு வகையில் நிம்மதியின்மை ஏற்படும். தாரத்தாலும், தனயனாலும் நிம்மதி இழக்காதிருக்க வேண்டுமானால் நல்ல பொருத்தம் பார்த்தே மனம் முடிப்பது அவசியமாகும்.

மகரம்
இனிமைக் குணத்தோடும் காட்சியளிக்கும் இவர்கள் வைராக்கிய மனம் பெற்றவர்கள். நண்பர்கள் வட்டாரத்தில் ஒர் தனி முத்திரையைப் பதித்து விடுவார்கள்.

வெளிவட்டார நட்பு வியக்கும் விதம் அதிகரிக்கும் பொறுமைசாலிகளாக விளங்கும் இவர்கள் வாழ்க்கையில் பல சோதனைகள் ஏற்பட்ட பிறகு தான் சாதனை உருவாகும். மேதினி போற்றும் வாழ்க்கை பிற்பகுதியில் தான் காணமுடியும்.

தாரத்தை தேர்ந்தெடுக்கும் போதும், தொழில் அமைக்கும் போதும் ஜாதக பலம் அறிந்து செயல்பட்டால் தான், சாதகம் பெறமுடியும். இவர்களிடம் காணப்படும் தாழ்வு மனப்பான்மையை அகற்றினால் வாழ்வில் உயர்நிலை அடைய முடியும்.

கும்பம்
எவ்வளவு உயர்ந்த நிலையில் இவர்கள் இருந்தாலும் நீங்காத மனக்குறை ஒன்று இருந்துக் கொண்டே இருக்கும். தன் வாழ்வில் வரும் சந்தோஷமானாலும் சரி, சங்கடமானாலும் சரி பிறரிடம் சொல்லாமல் தங்களுக்குத் தாங்களே ஆறுதல் கூறி தேற்றிக் கொள்வார்கள்.

படிப்பை விட அனுபவத்தால் உயர்நிலை அடைந்தவர்கள் பலர். பலரையும் ஏற்றிவிடும் ஏணியாக விளங்கும் இவர்கள் பெற்றோர் வழியில் பிரச்சினைகளை சந்திப்பார்கள். பெற்றோர்கள் தங்களைவிட சகோதர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்.

தாராள மனப்பான்மை கொண்ட இவர்களுக்கு ஒரு பகை நட்பாகும் பொழுது மற்றொரு நட்பு பகையாகிவிடும். எனவே அதைப் பற்றி இவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

மீனம்
மற்றவர்கள் செய்ய முடியாத காரியத்தை எளிதில் செய்து முடிக்கும் திறமை பெற்றிருப்பார்கள். பிறரது மனநிலையை அறிந்து கொண்டு அதற்கேற்றார்போல் செயல்படுவார்கள்.வாழ்க்கையில் படிப்படியான வளர்ச்சியை காண்பார்கள்.இவர்கள் தவறு செய்தாலும் அதை ஒப்புக் கொள்வார்கள். இவர்களுக்கு பதவி தானே தேடிவரும்.

அதுதான் இவர்களின் தனித்தன்மை. வெளியூருக்கு செல்லுவது அதிக நாட்டம் கொள்வார்கள். அன்னதானம் முதல் ரத்ததானம் வரை செய்யும் மனப்பான்மை பெற்ற இவர்கள் நிதானம் மட்டும் பெற்றிருப்பார்கள்.பிறருக்கு நல்ல ஆலோசனைகளை கூறுவார்கள். பிறருடைய சொத்துக்காகவோஇ பொருளுக்காகவோ ஆசைப்பட மாட்டார்கள்.

Facebook Follow

Name

2019 New Year Rasi Palan,7,latest,1,Nallur kovil,12,shirdi sai baba,1,ஆலய அறிவித்தல்கள்,2,ஆலயதரிசனம்,41,ஆன்மீகம்,115,இம்மாத பலன்,7,இவ்வார பலன்,1,ஏழரை சனி,1,குருபெயர்ச்சி பலன்கள்,17,சுக்ரன் பெயர்ச்சி பலன்கள்,1,விரதம்,3,வீடியோ,1,ஜோதிடம்,105,
ltr
item
Astrology Yarldeepam: இந்த ராசிக்காரர்கள் இந்த விடயத்தில் மிகவும் உஷாராகவே இருப்பார்களாம்….. நீங்களும் அப்படியா….?
இந்த ராசிக்காரர்கள் இந்த விடயத்தில் மிகவும் உஷாராகவே இருப்பார்களாம்….. நீங்களும் அப்படியா….?
http://www.newlanka.lk/wp-content/uploads/2018/05/1-38.jpg
Astrology Yarldeepam
http://astrology.yarldeepam.com/2018/05/blog-post_8.html
http://astrology.yarldeepam.com/
http://astrology.yarldeepam.com/
http://astrology.yarldeepam.com/2018/05/blog-post_8.html
true
2040982477258416527
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy